பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் எப்போ தெரியுமா? சோழர்கள் மீண்டும் வருகிறார்கள்.. பிரம்மாண்ட ப்ரமோ!

சென்னை: பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த ஆண்டு வெளியாகி 500 கோடி வசூலை உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைக்காவியமாக மாற்றி ரசிகர்களை இந்த ஆண்டு தியேட்டரை நோக்கி படையெடுக்க வைத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம்.

இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

2 பாகங்கள்

2 பாகங்கள்

லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஒரே மூச்சில் 150 நாட்களிலேயே பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக எடுத்து முடித்து விட்டனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் 2ம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எந்த தேதியில் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

500 கோடி வசூல்

500 கோடி வசூல்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 2 பெரிய படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 எப்போ

பொன்னியின் செல்வன் 2 எப்போ

முதல் பாகமே அசுர வசூல் சாதனை படைத்த நிலையில், அதன் 2ம் பாகத்திற்கான சிஜி மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் இன்னமும் பிரம்மாண்டமாக நடைபெற்று தற்போது புதிய ப்ரமோவுடன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகும் என மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட காட்சிகள்

பிரம்மாண்ட காட்சிகள்

ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி மற்றும் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ள காட்சிகளும், பழிவாங்க துடிக்கும் நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் இருக்கும் புதிய பிரம்மாண்ட ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X