கன்னட திரையுலகையே கதிகலங்க வைத்த காந்தாரா விரைவில் தமிழில் வெளியாகிறது.. டிரைலரை வெளியிட்ட கார்த்தி!

சென்னை: கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மற்றுமொரு அட்டகாசமான படமாக வெளியாகி இந்திய திரையுலகையே மிரட்டி வருகிறது காந்தாரா.

ரிஷப் ஷெட்டி இயக்கி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி காந்தாரா படத்தின் அட்டகாசமான தமிழ் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரவேற்றுள்ளார்.

மொழிகளை கடந்து

மொழிகளை கடந்து

தமிழ்ப் படம், தெலுங்கு படம், கன்னட படம், மலையாள படம், இந்தி படம், ஆங்கில படம் என பிரித்து பார்த்து சிலர் ஒதுக்கி வரும் நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் எந்தவொரு நல்ல படமாக இருந்தாலும், மொழிகளை கடந்து அதற்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தை மற்ற மொழிகளில் பெரும்பாலான ரசிகர்கள் புறக்கணித்த நிலையிலும் கன்னட படமான காந்தாரா படத்தின் தமிழ் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளார் கார்த்தி.

கார்த்தி வெளியிட்ட காந்தாரா டிரைலர்

கார்த்தி வெளியிட்ட காந்தாரா டிரைலர்

வந்தியத்தேவன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கார்த்தி அடுத்து சர்தார் ஆக தீபாவளிக்கு சரவெடி வெடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ள காந்தாரா படத்தின் தமிழ் டப்பிங் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

காந்தாரா கதை என்ன

காந்தாரா கதை என்ன

காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று அர்த்தம். நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த ராஜா ஒருத்தர் ஒரு காட்டுக்கு வந்த போது, அங்கே உள்ள சிறு தெய்வத்தை பார்த்து நிம்மதியடைகிறார். பின்னர், அந்த மக்களுக்கு அந்த காட்டின் நிலத்தை சொந்தம் என எழுதி கொடுக்கிறார். மன்னனின் வம்சாவழியில் வந்த ஒருத்தர் நிலத்தை வாங்க பிரச்சனை செய்யும் போது அப்பா ரிஷப் ஷெட்டி சாமி ஆடி சாபம் விட, அவரும் ரத்தம் கக்கி இறக்கிறார்.

உரிமை போராட்டம்

உரிமை போராட்டம்

மகன் ஷிவா (ரிஷப் ஷெட்டி) கம்பளா ரேஸ் மூலம் 20 வருடம் கழித்து என்ட்ரி கொடுக்கிறார். இந்த முறை அரசு அந்த நிலத்தை அந்த ஊர் மக்கள் அபகரித்து விட்டனர் என வனத்துறை பிரச்சனையை கிளப்புகிறது. வன அதிகாரியாக கிஷோர் நடிப்பில் மிரட்டி உள்ளார். இந்த பிரச்சனையை நாயகன் எப்படி சரி செய்கிறார் என்பதை வெறித்தனமான கிளைமேக்ஸ் உடன் சொல்லி இருக்கும் படம் தான் காந்தாரா. டிரைலரை பார்க்கும் போதே பிரம்மிப்பாக இருக்கிறது. வரும் அக்டோபர் 15ம் தேதி தமிழ் டப்பிங் உடன் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X