twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் பெயர் சர்ச்சை..அருள்மொழி வர்மனா? அருண்மொழி வர்மனா?படக்குழுவினர் விளக்கம்!

    |

    சென்னை : பொன்னியின் செல்வனான ராஜ ராஜசோழனின் பெயர் அருள்மொழி வர்மனா அல்லது அருண்மொழி வர்மனா என்ற சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    Recommended Video

    Ponniyin Selvan, உலகமே வியந்து பார்க்கும் அருள் மொழி வர்மன்

    ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடைபெற்றது.

    இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியரில் நடைபெற்றது. குவாலியர் கோட்டை 9ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.

    மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? பரிசுத்தொகை இத்தனை லட்சங்களா?.. அடேங்கப்பா! குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? பரிசுத்தொகை இத்தனை லட்சங்களா?.. அடேங்கப்பா!

    கதாபாத்திர போஸ்டர்

    கதாபாத்திர போஸ்டர்

    பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொன்றாக படக்குழு போஸ்டரை வெளியிட்டனர். அதில், ஆதித்த கரிகாலன, வந்தியத் தேவன்,அருண்மொழி வர்மன், குந்தவை, நந்தினி ஆகியோரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது.

    பெயர் சர்ச்சை

    பெயர் சர்ச்சை

    இதில் ஆதித்த கரிகாலன் நெற்றியில் இருப்பது திலகமா? நாமமா? என்ற சர்ச்சை எழுந்தது. இதுமிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும், அருண் மொழி வர்மன் பெயர் குறித்தும், த்ரிஷாவின் உடை தமிழ்நாட்டு பாரம்பரிய உடை தானா என்றும் த்ரிஷாவின் போஸ்டர் வெளிவந்தபோது விமர்சனங்கள் எழுந்தன.

    விளக்கம் அளித்த படக்குழு

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அருண்மொழியா, அருள்மொழியா என்ற சர்ச்சைக்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சுந்தர சோழர் என்றும் இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்படக்கூடிய சோழ மன்னனுடைய இளைய மகன்தான் அருண்மொழி வர்மன். சோழர் காலத்தில் செப்பேடுகளில் அருண்மொழி வர்மன் என்று இருப்பதாக ஆராய்ச்சிபூர்வமாக ஓர் அறிக்கையை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ரிலீஸ் தேதி

    ரிலீஸ் தேதி

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில், குதிரைப்படை, யானைப்படை, சீறிப்பாய்ந்து வந்த கப்பல், விக்ரமின் கர்ஜிக்கும் குரல் என டீசர் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன்உள்ளனர்.

    English summary
    ponniyin selvan arul mozhi or arun mozhi Nema controversy.. ponniyin selvan team explained.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X