பொன்னியின் செல்வனில் இருந்து தேவராளன் ஆட்டம் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்: Goosebump மொமண்ட் இது

சென்னை: லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த 'தேவராளன் ஆட்டம்' பாடலின் லிரிகல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆஸ்கர் நாயகனின் மாஸ் கம்பேக்

ஆஸ்கர் நாயகனின் மாஸ் கம்பேக்

1992ல் இருந்து தமிழ்த் திரையிசையின் தனி அடையாளமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் ஏஆர் ரஹ்மான். கடந்த சில வருடங்களாக ரஹ்மான் இசையில் பழைய வேகம் இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். தொடர்ந்து வெளியான இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாத ஏஆர் ரஹ்மான், எப்போதும் போல சூப்பர் பாடல்களை கொடுத்துக் கொண்டே தான் இருந்தார். ஆனாலும், அடங்காத விமர்சகர்களுக்கு இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாடல்களில் வெரைட்டி காட்டிய ஏஆர்ஆர்

பாடல்களில் வெரைட்டி காட்டிய ஏஆர்ஆர்

ரோஜா படத்தில் இருந்து தொடங்கிய மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி. இன்றுவரை தொடர்ந்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்து வருகிறது. இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் வெரைட்டியாக பாடல்களைக் கொடுத்து மாஸ் காட்டியுள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இதனால், படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதனிடையே பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிரட்டிய தேவராளன் ஆட்டம் இசை

மிரட்டிய தேவராளன் ஆட்டம் இசை

முருக பக்தர்களையும் இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் இசைப் புள்ளியாக 'தேவராளன் ஆட்டம்' பாடல் உருவாகியுள்ளது. ரஹ்மானின் வித்தியாசமான இசைக் கோர்வையில் வெளியான இந்தப் பாடல், தமிழ் சினிமாவில் இதுவரை கேட்காத ஒரு புதுமை என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது. லிரிக்கல் வீடியோவிலேயே இசை, மேக்கிங், சினிமோட்டோகிராபியில் மிரட்டும் இந்தப் பாடல், திரையரங்குகளில் தெறிக்கவிடப் போவது உறுதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மான் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

ரஹ்மான் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

பொன்னியின் செல்வன் இசைக்காக இந்தோனேஷியாவின் பாலி தீவில் சென்று பல குறிப்புகளோடு திரும்பி வந்தார் ஏஆர் ரஹ்மான். அதற்கான நியாயத்தை தேவராளன் பாடலில் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். கடம்பூர் இரவில் நண்பர் கந்தமாறனுடன் குரவை கூத்துப் பார்க்கச் செல்லும் வந்தியத்தேவனுக்கு கிடைக்கும் அனுபவம் இந்தப் பாடலில் ரசிகர்களுக்கும் கிடைக்கிறது. அதேபோல், இளங்கோ கிருஷ்ணனின் வரிகளும், யோகி சேகரின் குரலும் தேவராளன் ஆட்டம் பாடலுக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளியான தேவராளன் ஆட்டம் லிரிக்கல் வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X