பொன்னி நதி ஆன் தி வே...ஜுலை 31 ல் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் இந்திய திரையுலகின் பிரபல நடிகர்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முன்னதாக படத்தின் முக்கிய ரோல்களில் நடித்துள்ள கேர்டர்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள்
இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக மேக்கிங் வீடியோவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார். இதனால் எப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும்...என்ன பாடலாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

பொன்னி நதி வருகிது
இந்த சமயத்தில் இன்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் நடிக்கும் கார்த்தி குதிரையில் வருவது போன்றும், பேக்கிரவுண்டில் கூட்டமாக பெண்கள் ஒரு புறமும், மற்றொரு புறம் ஆறு பாய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.வந்தியத் தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம்...பொன்னி நதி என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி வந்தாச்சு
இத்துடன் ஜுலை 31 ம் தேதி மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டில், சோழர்கள் உலகை நோக்கிய இசைப் பயணத்தை துவங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இது தான் ஓப்பனிங் சாங்கா?
இந்த போஸ்டர், பொன்னி நதி, வந்தியத் தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது பொன்னி நதி என துவங்கும் இந்த பாடல் தான் படத்தின் ஓப்பனிங் சாங்காக இருக்கும் என்பது தெரிகிறது. பொன்னியின் செல்வன் கதையின் துவக்கமே வந்தியத்தேவன் சோழ நாட்டிற்கு குதிரையில் வருவதும்,மக்களின் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தை ரசித்த படி வருவதாக தான் கதையின் பயணம் துவங்கும். அதனால் வந்தியத் தேவனின் இன்ட்ரோ சாங்காகவும், படத்தின் ஓப்பனிங் சாங்காகவும் இது இருக்கலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











