Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெய்ட்டிங்கிலேயே வெறி ஏறுதே...நாளை பொன்னியின் செல்வன் இசை பயணம் ஆரம்பம்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக இயக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மோஷன் போஸ்டர், கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் ஆகியன வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னையில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அனைவருக்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள், இந்த காட்சிகளை எப்படி படமாக்கி இருப்பார்கள் என்பதை திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல்.. கனவுகளை துரத்தும் வெற்றிநாயகன்.. ட்ரெண்டிங்கில் அஜித்!

நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
இந்த சமயத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜுலை 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொன்னி நதி என ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவன் ரோலில் நடித்துள்ள கார்த்தி, தஞ்சைக்கு வரும் போது நடக்கும் ஆடித்திருநாள் கொண்டாட்ட பாடலாக இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிளை பாடியது இவரா
இந்நிலையில் இன்று மற்றொரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், அந்திவான சூரியனின் பின்புலத்தில் குதிரை மீது ஒரு வீரன் அமர்ந்திருப்பது போலவும், அவன் நதிக்கரையில் பயணிப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம் பொன்னி நதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தான் இன்ட்ரோ சாங்
நாளை மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை, அவரே பாடி உள்ளார். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை பாடி உள்ளார்.வந்தியத்தேவன் தஞ்சைக்கு வரும் சமயத்தில் பொன்னி நதி(தற்போதைய காவிரி ஆறு) கரையில் மக்கள் ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அந்த அழகை கண்டு ரசித்தபடி வந்தியத் தேவன் குதிரையில் பயணிப்பான். இது தான் படத்தின் இன்ட்ரோ சாங்காகவும், வந்தியத் தேவனின் இன்ட்ரோ சாங்காகவும் இருக்கும் என தெரிகிறது.

இதுக்கும் விழா நடக்குதா
நாளை மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாலில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இன்று மாலை ஃபர்ஸ்ட் சிங்கிளிற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

டிரெண்டிங்கில் தெறிக்குதே
பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியிடப்பட உள்ள தகவலை ரசிகர்கள் இப்போதே கொண்டாட துவங்கி விட்டனர். ட்விட்டரில் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் விக்ரம், த்ரிஷா பற்றிய தகவல்களை வெளியிடுமாறு ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.