twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’இணையத்தில் வெளியானால் பெரிய நஷ்டம் வரும்’..பொன்னியின் செல்வன் குழு வழக்கு..உயர் நீதிமன்றம் உத்தரவு

    |

    பொன்னியின் செல்வன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    2405-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் படத்தை முறைகேடாக வெளியிடுவதை தடுக்க இணைய தள சேவை நிறுவனங்கள் தடுக்கக் கோரி லைகா வழக்கு

    நாளை படம் வெளியாக உள்ள நிலையில் லைகா பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.. கல்கியின் பேத்தி சொல்லும் சுவாரஸ்யம்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.. கல்கியின் பேத்தி சொல்லும் சுவாரஸ்யம்!

     நவீன வரவுகள் திரைத்துறைக்கு சாதகம்-பாதகம்

    நவீன வரவுகள் திரைத்துறைக்கு சாதகம்-பாதகம்

    தமிழ் திரையுலகில் மாற்றங்கள் வந்த அதே நேரம், டெக்னாலஜியின் வளர்ச்சியும் அதிகரித்தது. 90 களில் இணைய சேவை அறிமுகமான போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின புதிய டெக்னாலஜியை திரையுலகினரும் பயன்படுத்தினர். பிலிம் ரோல் போய் டிஜிட்டல் கேமராக்கள், கிளவுட் என தொழில்நுட்பம் வளர்ந்தது. டேப்கள் ஒழிந்து சிடிக்கள் வெளியான பின் படம் வெளியாகும்போதே அதன் திருட்டு சிடிக்கள் உடனடியாக பிரிண்ட் செய்யப்பட்டு வெளிவந்தது. வெளிநாட்டு உரிமை விற்கும்போது அங்கிருந்து மாஸ்டர் பிரிண்ட் போட்டு அதை லட்சக்கணக்கில் பிரிண்ட் போட்டு விற்றார்கள்.

     காணாமல் போன தமிழ் ராக்கர்ஸ்

    காணாமல் போன தமிழ் ராக்கர்ஸ்

    இணையதள குற்றங்கள் பெருக பெருக வீடியோ பைரசி அதிகரித்தது. பின்னர் என்னதான் திரையுலகினர் உஷாராக இருந்தாலும் இணையதளம் மூலம் படம் வெளியானது. திடீரென தமிழ் ராக்கர்ஸ் உருவாகி புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்டனர். இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது பாதிக்கப்பட்டது. சைபர் பிரிவு போலீஸ் நீதிமன்றங்கள் தலையீட்டின் பேரில் பலர் சிக்கினர். பின்னர் வெளியிடும் இணையதளங்கள் பட்டியலிடப்பட்டன. தமிழ் ராக்கர்ஸும் விலகி காணாமல் போனார்கள். ஆனாலும் படம் வெளியாகும் சில நாட்களில் இன்ஸ்டாகிராம் மூலம் பட லிங்குகள் ஷேர் செய்யப்படுவது தொடரத்தான் செய்கிறது.

     புதிய பட வெளியீட்டின் போது தொடரப்படும் வழக்குகள்

    புதிய பட வெளியீட்டின் போது தொடரப்படும் வழக்குகள்

    ஆனாலும் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் உயர் நீதிமன்றதில் பட்டியலிடப்பட்ட இணையதளங்களில் படத்தை வெளியிட முறைப்படி தடைக்கேட்டு திரைத்துறையினர் வழக்கு தொடுப்பார்கள். நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தடை விதித்து உத்தரவிடும். இதன்மூலம் வீடியோ பைரசி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவறுகளை செய்ய அஞ்சும் நிலை ஏற்படும். இந்நிலயில் லைகா பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் - முதல் பாகம் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

     பெருத்த நஷ்டத்தை சந்திப்போம்- லைகா நிறுவனம் வாதம்

    பெருத்த நஷ்டத்தை சந்திப்போம்- லைகா நிறுவனம் வாதம்

    இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "மிகுந்த பொருட்செலவில், இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும், எனவே சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சட்டவிரோதமாக இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    The High Court has banned the illegal publication of Ponniyin Selvan movie on websites. Lyca files suit seeking restraining order against website companies to prevent illegal publication of image on more than 2405 websites. The Madras High Court has ordered ban in the case of Lyca Film Production Company.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X