லைகாவே ரிலீஸ் செய்யும் பொன்னியின் செல்வன்..முக்கிய நிறுவனம் இல்லாமல் வெளியாகும் 2 பெரிய படங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக உரிமை யாருக்கும் வழங்கப்படாமல் லைகாவே நேரடியாக ரிலீஸ் செய்கிறது.

தமிழக பட உரிமைகளில் சமீப காலமாக முன்னணியில் இருந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப்பட உரிமையை வாங்கும் முயற்சி நடக்கவில்லை.

நானே வருவேன் படத்தை தயாரிப்பாளர் தாணுவே நேரடியாக வெளியிடுவதால் அதுவும் இந்த வார கடைசியில் வெளியாகும் 2 முக்கிய படங்களை ரெட் ஜெயண்ட் விநியோகிக்கவில்லை.

லைகா/மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டு தயாரிப்பில் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் நீண்ட ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பலர் எடுக்க முயன்று 70 ஆண்டு கால முயற்சிக்குப்பின் மணிரத்னம் தற்போது எடுத்துள்ளார். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளது. படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் லைகா 70% மெட்ராஸ் டாக்கீஸ் 30% என்கிற ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டதால் படத்தை நேரடியாக விநியோகம் செய்ய மணிரத்னம் விரும்பியதாக கூறப்படுகிறது.

 பெரும் எதிர்ப்பார்ப்புடன் வரும் நானே வருவேன் படம்

பெரும் எதிர்ப்பார்ப்புடன் வரும் நானே வருவேன் படம்

இதேபோல் நானே வருவேன் படம் தாணுவின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. இப்படத்தை செல்வராகவன் இயக்குவதாலும், யுவன் ஷங்கர் ராஜா இசை என்பதாலும் 11 ஆண்டுகளுக்கு பின் இக்கூட்டணி இணைவதாலும் படத்துக்கு பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் தனுஷுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் நானே வருவேன் மீதும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. தாணு எப்போதும் தன் படத்தை தானே விநியோகம் செய்வார் என்பதால் இந்தப்படமும் ரெட் ஜெயண்ட் பக்கம் போகவில்லை.

 10 நாட்களாக வேகம் எடுக்கும் பொன்னியின் செல்வன் விளம்பர வேலைகள்

10 நாட்களாக வேகம் எடுக்கும் பொன்னியின் செல்வன் விளம்பர வேலைகள்

விக்ரம் முதற்கொண்டு பல படங்களை வெற்றிபடமாக விநியோகம் செய்த ரெட்ஜெயண்ட் தற்போது இரண்டு படங்களையும் விநியோகிக்கவில்லை. லைகா நேரடியாக விநியோகிப்பதால் கடந்த 10 நாட்களாக முழுவீச்சில் ப்ரமோஷன் வேலைகள் நடக்கின்றன. படத்தில் நடித்த நட்சத்திரங்கள், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைஅவரும் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். கடந்த 10 நாட்களாக பொன்னியின் செல்வன் வேகமெடுத்துள்ளது.

 இரண்டு படங்களின் சாட்டிலைட், ஓடிடி உரிமை யார் எடுத்துள்ளது?

இரண்டு படங்களின் சாட்டிலைட், ஓடிடி உரிமை யார் எடுத்துள்ளது?

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை லைகா வெளியிடுகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தை கலைப்புலி தாணு வெளியிட படத்தின் ஓடிடி உரிமை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. அக்டோபர் மாத இறுதியில் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும். இதனால் இரண்டு படங்களும் அவரவர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X