Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்னும் சில தினங்களில் வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர்!எங்கன்னு தெரிஞ்சா ஆச்சரியப்பட்டு போவீங்க!
சென்னை : மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வம் படத்தின் முதல் பாகம்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
3 நிமிஷம் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்...விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலுக்கு எதுவும் இல்லையா?
கடந்த மாதத்தில் படத்தின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களது கெட்டப்புகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்பட்டது.

பொன்னியின் செல்வன் படம்
கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படிக்காத 90 கிட்ஸ் இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அவரது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று புதினங்கள் அந்தக் காலகட்டத்திற்கே நம்மை அழைத்து சென்றவை. அந்த அனுபவங்கள் புத்தக வாசிப்பு அதிகமாக இல்லாத இளைய தலைமுறைக்கு கிடைப்பது கடினம்தான்.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்
அந்த குறையை போக்குவதற்காக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் படம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தற்போது தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான கேரக்டர் அறிமுகம்
ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு உள்ளிட்ட மல்ட்டி ஸ்டார்கள் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான அவர்களது கேரக்டர்கள் அறிமுகம் சிறப்பாக அமைந்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

டீசர் வெளியீடு
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனையும் ஒரு பக்கம் படக்குழு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீடும் தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது.

பெரிய கோயிலில் டீசர் வெளியீடு
வரும் ஜூலை 7ம் தேதி தஞ்சாவூரில் பெரிய கோயிலில் பிரம்மாண்டமான அளவில் இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சாத்தியமான முயற்சி
ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் குந்தவையாக த்ரிஷா இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கடந்த 2010லேயே விஜய், மகேஷ்பாபு உள்ளிட்டவர்களை வைத்து படமாக்க மணிரத்னம் முயன்ற நிலையில், தற்போது இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளது.