Don't Miss!
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- News
திடீரென உயரும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு.. உ.பி-யில் ஒருவர் பலி!
- Lifestyle
இந்த 4 செடிகளில் ஒன்று உங்க வீட்டில் இருப்பது அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருமாம்!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த பட்ஜெட்… நடிகர், நடிகைகள் சம்பளம் பத்தி தெரிஞ்சிக்கணுமா?
மும்பை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக பொன்னியின் செல்வன் இருக்கும் என சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த பட்ஜெட் குறித்தும், நடிகர், நடிகைகள் சம்பளம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
கடவுளே எல்லாம் நல்லதா நடக்கனும்..நடிகை காஜல் அகர்வால் கணவருடன் சாமி தரிசனம்!

கோலிவுட்டின் மெகா மஜா
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார் என 30க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லைகா, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன. பட்ஜெட்டிலும், அதிகமான Star casting என்றளவிலும் பொன்னியின் செல்வன் பயங்கர பிரம்மாண்டமான படைப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் தமிழ் சினிமாவில் இப்படியொரு பிரம்மாண்டமான படைப்பு கைகூடுமா எனத் தெரியவில்லை.

பொன்னியின் செல்வன் மொத்த பட்ஜெட்
இந்தியாவில் கேரளா, ராஜாஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளிலும், தாய்லாந்து, இந்தோனேஷியா என வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 500 கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் அணிந்திருந்த நகைகள் அனைத்துமே ஒரிஜினல் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாமே ஒரிஜினலாக இருக்க வேண்டும் என படக்குழு தாராளமாக செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம், ஐஸ்வர்யா சம்பளம்
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு 12 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரமுக்கு அடுத்தபடியாக நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக நடித்துள்ள ஜெயம் ரவி, 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். படத்தில் இவர்தான் ராஜராஜ சோழன் பாத்திரமான அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ரஹ்மானுக்கு அதிக சம்பளம்
அதேபோல், வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என சொல்லப்படுகிறது. குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷா இரண்டரை கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். சுந்தர சோழனாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ், வானதி கேரக்டரில் நடித்துள்ள ஷோபிதா இருவருக்கும் தலா ஒரு கோடி சம்பளம் எனக் கூறப்படுகிறது. பூங்குழலியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லெட்சுமிக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு 10 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர மற்ற நடிகர்கள், நடிகைகளுக்கும் தாராளமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
-
கையில் குழந்தையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்.. அந்த நடிகையும் போயிருக்காங்க!
-
ஆளுக்கு ஒரு ரெண்டு நாள்.. நட்பு ரீதியாக வந்து போறாங்களாம்.. உச்ச நடிகர் படத்தை எதிர்பார்க்கலாமா?