Just In
- 18 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Sports
மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை தொடர்... மகளிர் தினத்துல ஐசிசி ஸ்பெஷலா அறிவிச்சிருக்காங்க!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொன்னியின் செல்வன் ஷூட்டிங்... ஒரு நாள் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா அசந்துடுவீங்க!
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் எவ்வளவு செலவாகிறது என்பது தெரிய வந்துள்ளது.
கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
பாகுபலி போல இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
ஆண் நண்பரின் மேலே ஏறி அமர்ந்து.. மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு.. வைரலாகும் வீடியோ!

ஆதித்த கரிகாலன்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பிரமாண்ட செட்
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் எடுக்கப்பட்டன.

ராமோஜிராவ் பிலிம்சிட்டி
இதில் சுமார் 100 குதிரைகள் பங்கேற்றன. சுமார் 800 க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களும் பங்கேற்றனர். இதையடுத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்துவருகிறது. இங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக, ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு மட்டும்
இதன் படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கான், நடிகை ஷோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் இணைந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு மட்டும் சுமார் ரூ.90 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை செலவாகிறது என்று கூறப்படுகிறது. வேறு எந்த இந்தியப் படத்துக்கும் தினமும் ஒரு கோடிவரை செலவானதில்லை என்கிறார்கள்.

கணக்கு வழக்குகள்
ஏராளமான குதிரைகள் படத்தில் பங்கேற்கின்றன. ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றனர். இதனால்தான் இவ்வளவு செலவு என்று கூறப்படுகிறது. கணக்கு வழக்குகளை கண்காணிக்க, தனி டீமே நியமிக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த மாதம் இறுதிவரை படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அதன்பிறகு படக்குழு சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிகிறது.