பொன்னியின் செல்வனா? ராவணன் பார்ட் 2வா? 50ஐ நெருங்கும் ஐஸ்வர்யா ராய் நந்தினியா? ரசிகர்கள் விளாசல்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் இருக்கும் அழகான போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான போஸ்டர்களிலேயே இதுதான் கொஞ்சம் பார்க்கும் படியாக ராயலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் கதை தெரிந்தவர்கள் என்ன மணிரத்னம் ராவணன் பார்ட் 2 படத்தை எடுத்து வைத்திருக்கிறாரா? என்கிற கேள்வியை எழுப்பி பங்கம் செய்து வருகின்றனர்.

டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராய்

டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராய்

#AishwaryaRaiBachchan என்கிற ஹாஷ்டேக்கை போட்டு பொன்னியின் செல்வன் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியானதும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி மற்றும் மந்தாகினி என இரு வேடங்களில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதித்த கரிகாலனின் நெற்றியில் நாமம் ஏன்? வந்தியத்தேவனின் நெற்றியில் திருநீறு எங்கே என விமர்சித்தவர்கள் தற்போது நந்தினியின் போஸ்டரை பார்த்து அப்படியொரு கேள்வியை எழுப்பி உள்ளனர்.

வில்லியாக செட் ஆவாரா

வில்லியாக செட் ஆவாரா

அழகே பொறாமைப்படும் பேரழகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் எப்படி இந்த படத்தில் நயவஞ்சகத்தின் மொத்த உருவான நந்தினி தேவியாக மிரட்டப் போகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பார்க்கவே பால் வடியும் பச்சைக் குழந்தை போன்ற முகத்தை வைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராய் சதித் திட்டங்களையும் கண்ணசைவுகளையும் மாற்றி மாற்றி நடிப்பாரா? என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

50 வயது நடிகை நந்தினியா?

50 வயது நடிகை நந்தினியா?

48 வயதான ஐஸ்வர்யா ராய் மந்தாகினி கதாபாத்திரத்திற்கு நல்ல தேர்வு தான். ஆனால், வயதான பெரிய பழுவேட்டரையரை மணந்து கொள்ளும் இளம் வயது நந்தினிக்கு அந்த கதாபாத்திரம் எப்படி பொருந்தும் என்கிற கேள்வியையும் பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எழுப்பி மணிரத்னம் இந்த முறையும் சொதப்ப போகிறாரா? என்ற விமர்சனத்தையும் முன் வைத்துள்ளனர். ஜீன்ஸ், ஜோதா அக்பர் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் ஓகே. ஆனால், இப்போ நந்தினியாக நடிக்க நடிகைகளே இல்லையா? என்றும் கொடி படத்தில் வில்லியாக நடித்த த்ரிஷாவையே நந்தினியாக போட்டிருக்கலாமே என்றும் விமர்சனங்கள் குவிகின்றன.

ராவணன் பார்ட் 2வா

ராவணன் பார்ட் 2வா

ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு விக்ரம் அவரை காதல் செய்ய டார்ச்சர் செய்வார். அந்த படத்திலேயே முறைக்கும் காட்சிகளில் கூட ஐஸ்வர்யா ராயின் முகத்தில் செயற்கைத் தனம் தெரிந்ததால் தான் அந்த படம் ஓடவே இல்லை. இந்நிலையில், மீண்டும் ஐஸ்வர்யாராயை நந்தினியாக போட்டு விக்ரமை ஆதித்த கரிகாலனாக நடிக்க வைத்து ராவணன் பார்ட் 2வை எடுத்து வைத்துள்ளாரா? மணிரத்னம் என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Recommended Video

Ponniyin Selvan Teaser... பெரிய கோவிலில் பிரம்மாண்டம் *Kollywood | Filmibeat Tamil
மேக்கிங் நல்லா இருக்கணும்

மேக்கிங் நல்லா இருக்கணும்

பொன்னியின் செல்வன் படத்தை பிரபலப்படுத்தும் விதமாக வெளியாகும் புரமோஷன் போஸ்டர்களையே ரசிகர்கள் பாராட்டாமல் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர். இதில் எல்லாம் மீண்டு பான் இந்தியா வெற்றியை இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் மூலம் ருசித்து தமிழ் சினிமாவின் பெருமைப் படமாக இதை மாற்ற வேண்டும் என்றால், மேக்கிங் தீயாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சட்டியில் என்ன இருக்கிறது என்பது செப்டம்பர் 30ம் தேதி தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X