twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் ரியல் கேரக்டர்கள் எப்படின்னு தெரியாதுன்னா இப்ப தெரிஞ்சுக்கோங்க

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை மறுநாள் (செப் 30) வெளியாகிறது.

    கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற ரியல் கதாபத்திரங்கள் எப்படி இருந்தன என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

    கடைசி வரைக்கும் அந்த ஆசை மட்டும் நடக்கவே இல்லை.. விக்ரமுக்கா இந்த நிலைமை! கடைசி வரைக்கும் அந்த ஆசை மட்டும் நடக்கவே இல்லை.. விக்ரமுக்கா இந்த நிலைமை!

    நாவலில் இருந்து திரைப்படமாக

    நாவலில் இருந்து திரைப்படமாக

    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வனில் வரும் கேரக்டர்கள் எப்படியானவர்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

    விக்ரமின் ஆதித்த கரிகாலன்

    விக்ரமின் ஆதித்த கரிகாலன்

    பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கேரக்டர் தான் ரொம்பவே முக்கியமானது. இந்த கேரக்டரில் சியான் விக்ரம் நடித்துள்ளார். ஆதித்த கரிகாலன் சுந்தர சோழரின் மூத்த மகனும், சோழ தேசத்தின் முடிக்குரிய இளவரசனும் ஆவன். 12ம் வயதிலேயே போர் புரிந்த ஈடு இணையற்ற மாவீரன். அதேபோல் இராஷ்டிர கூடர்களை விரட்டியடித்து காஞ்சியில் சோழக்கொடியை நாட்டியதும் ஆதித்த கரிகாலன் தான். மேலும், பெற்றோர்களுகாக காஞ்சியில் பொன்மாளிகை கட்டி அழகு பார்த்தவர். வீரபாண்டியனின் தலையை கொய்ததால் பல சூழ்ச்சிகளை சந்தித்தான். அதேபோல், நந்தினியுடனான காதல் தோல்வியால் போரில் வெறித்தனமாக சண்டையிட்டார்.

    கார்த்தியின் வல்லவராயன் வந்தியத்தேவன்

    கார்த்தியின் வல்லவராயன் வந்தியத்தேவன்

    பொன்னியின் செல்வன் நாவலில் நாயகன் என்றால் அது வந்தியத்தேவன் தான். பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். ரஜினி, கமல் போன்ற பல நடிகர்கள் நடிக்க ஆசைப்பட்டது வந்தியத்தேவன் கேரக்டரில் என்பது குறிப்பிடத்தக்கது. வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பன். அதுமட்டும் இல்லாமல், சாமர்த்தியசாலியாகவும் சிறந்த போர்வீரனாகவும் பல வெற்றி வாகை சூடியவன். ஆதித்த கரிகாலரின் ஒற்றனாகாவும், பெண்களிடம் மனதை பறிகொடுக்கும் மன்மதனாகவும், குந்தவையின் மனம் கவர்ந்த மனாலனாகவும் வந்தியத்தேவனுக்கு பல முகங்கள் உண்டு. இந்த நாவலில் அனைத்து பாத்திரங்களையும் சந்திக்கும் ஒரே கேரக்டர் என்றால் அது வந்தியத்தேவனாக தான் இருக்க முடியும்.

    ஜெயம் ரவியின் அருண்மொழிவர்மன்

    ஜெயம் ரவியின் அருண்மொழிவர்மன்

    'பொன்னியின் செல்வன்' என்ற படத்திற்கு சரியாகப் பொருந்தக் கூடிய பாத்திரம் தான் அருண்மொழி வர்மன். இந்த கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். வர்மன் சுந்தர சோழரின் இளைய மகனான அருண்மொழி வர்மன், சோழ தேசத்து மக்களின் செல்லபிள்ளையாக வலம் வந்தவன். யானைகளை கையாள்வதிலும் பலே கில்லாடி. அக்கா குந்தவையின் சொல்லுக்கு மரியாதை கொடுக்கும் தம்பியாகவும், கலை, இலக்கியம், கட்டடக்கலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவனாகவும் விளங்கியவன். சோழ மக்களுக்காக தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்த சிறந்த போர்வீரன் என்ற பெருமையும் அருண்மொழி வர்மனுக்கு உண்டு.

    ஐஸ்வர்யா ராயின் நந்தினி

    ஐஸ்வர்யா ராயின் நந்தினி

    பொன்னியின் செல்வன் நாவலில் மிக முக்கியமான கேரக்டரான நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அர்ச்சகர் வீட்டில் வளர்ந்த நந்தினியின் அழகுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. சோழர்களுக்கு எதிரான சதிகள் அனைத்துக்கும் மூளையாக நந்தினியே முதன்மை காரணமாக இருப்பார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி, ஆதித்த கரிகாலரின் முன்னாள் காதலி என்ற இருமுகங்கள் நந்தினிக்கு உண்டு. சூழ்நிலையால் வஞ்சிக்கப்பட்டவள், மந்தாகினியின் மகள் என நந்தினி கூறப்படுகிறார்.

    த்ரிஷாவின் குந்தவை

    த்ரிஷாவின் குந்தவை

    நந்தினிக்குப் பிறகு குந்தவை கேரக்டரும் பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியமானது ஆகும். இந்த பாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். சுந்தர சோழரின் மகளான குந்தவைக்கு அரசியல் ஞானம் அதிகம் உண்டு. சோழர்களின் அரச குடும்பத்திலேயே ரொம்பவும் புத்திகூர்மை மிக்கவர் என்றால் அது குந்தவை தான். சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை அனைவருக்கும் குந்தவை மீது அதீத மரியாதை இருந்தது. பேரழகியான குந்தவை ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் அவருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியவர். அதேபோல், மக்களுக்காக பல இலவச மருத்துவமனைகளையும் கட்டினார்.

    ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் நம்பி

    ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் நம்பி

    பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார்க்கடியான் கேரக்டர் ரொம்பவே சிறப்புக்குரியது. இவரின் இயர்பெயர் திருமலை என சொல்லப்படுகிறது. சோழ தேசத்து முதல் மந்திரியான அனிருந்தரின் சீடராகவும் திறமையான உளவாளியாகவும் வலம் வந்தார். அதேபோல் தீவிர விஷ்ணு பக்தரான ஆழ்வார்க்கடியான் சிவபக்தர்களுடன் வம்பிழுப்பதையே வாடிக்கையாக வைத்திருப்பார். எந்நேரமும் வந்தியத்தேவை பின் தொடர்வதே ஆழ்வார்க்கடியானின் முழுநேர வேலையாக இருந்தது. நந்தியின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஐஸ்வர்யா லெட்சுமியின் பூங்குழலி

    ஐஸ்வர்யா லெட்சுமியின் பூங்குழலி

    பொன்னியின் செல்வன் நாவலில் இன்னொரு மிக முக்கியமான பெண் பாத்திரம் என்றால் அது பூங்குழலி தான். இந்தப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். கோடிக்கரையைச் சேர்ந்த பூங்குழலி கலங்கரை விளக்க காவலர் தியாகவிடங்கரின் மகள். சமுத்திரகுமாரி என்ற புனைப் பெயருக்கும் சொந்தகாரியாக வலம் வந்தார். படகை செலுத்துவதில் மிகுந்த திறமைசாலியான பூங்குழலி தனிமை விரும்பியாகவும் உடல் வலிமையும் மன வலிமையும் கொண்டவளுமாக இருந்தார். புத்திசாலியான அவர் அவ்வளவு எளிதாக யாருக்கும் அடிபணியமாட்டார். அருண்மொழி வர்மனையும் ஒருதலையாக காதலித்தவர் பூங்குழலி.

    பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்

    பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்

    பழுவர் சிற்றரசை ஆண்ட பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்துள்ளார். சோழ அரசின் தானதிகாரியான பெரிய பழுவேட்டரையர் போரில் 64 விழுப்புணகள் பெற்றவர். வயதானவர் என்றாலும் சரியான முரட்டு வீரராக மிரட்டியவர். வயதான பழுவேட்டரையரை நந்தினி திருமணம் செய்து தனது மாயவலையில் விழவைத்தார். அதேபோல், பெரிய பழுவேட்டரையரின் தம்பியாக பார்த்திபன் நடித்துள்ளார். இவர் தஞ்சை கோட்டையின் காவலராகவும் கண்டிப்பு மிகுந்தவராகவும் வலம் வந்தார். மதுராந்தகனின் மாமனாராகவும் நந்தினியை வெறுப்பவராகவும் சோழ தேசத்தின் மீது மீகுந்த பற்று கொண்டவராகவும் வாழ்ந்து மரணித்தார்.

    English summary
    Mani Ratnam directed Ponniyin Selvan film will release on the 30th. This film is based on Ponniyin Selvan novel written by Kalki. Here is brief information about the characters featured in Kalki's Ponniyin Selvan novel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X