twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனின் ஒரிஜினல் ஹீரோ..ராஜராஜ சோழனாக கலக்கிய சிவாஜி..1973-லேயே சாதனை படைத்த படம்

    |

    பொன்னியின் செல்வனை தூக்கி வைத்து கொண்டாடும்போது அதன் ஹீரோக்களின் பாவனைகளை பார்க்கும்போதும் ராஜராஜ சோழன் சிவாஜியின் பெருமை தெரிகிறது.

    ராஜராஜ சோழனாக குந்தவையின் தந்தையாக ராஜதந்திரத்தில் மிஞ்சிய அரசனாக சிவாஜி கணேசனின் நடிப்பு நமக்கே நடுக்கம் தரும்.

    ஒரு ராஜா எப்படி இருப்பார் ராஜராஜ சோழனை பாருங்கள், வீரபாண்டிய கட்டபொம்மனை பாருங்கள் என்று உதாரணம் காட்டுமளவுக்கு கம்பீரத்தைகாட்டிய சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்த நாள்.

    கலைத்தாயின் தலைமகன்.. அழியாப்புகழின் உச்சம்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஸ்பெஷல்!கலைத்தாயின் தலைமகன்.. அழியாப்புகழின் உச்சம்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஸ்பெஷல்!

     அந்த கால பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழன்

    அந்த கால பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழன்

    ராஜராஜ சோழன் படத்தை தமிழில் தயாரித்தபோது அதற்கு பல இடையூறுகள் இருந்தன. சிவாஜி கணேசன் நடிப்பில் ராஜராஜ சோழன் படம் பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்தது. சோழன் என்றாலே பிரம்மாண்டம தானே. இன்றைய பொன்னியின் செல்வனை போற்றுபவர்கள் 1973 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகின் 35 எம்.எம் வடிவில் சிறியதாக பார்த்த தமிழ் ரசிகர்களுக்காக முதல் சினிமா ஸ்கோப் படமாக (திரை அகன்று பிரம்மாண்டமாக தெரியும்) வெளிவந்தது.

     தஞ்சை கோயிலை கட்டும் வரலாற்றை கொண்ட கதை

    தஞ்சை கோயிலை கட்டும் வரலாற்றை கொண்ட கதை

    ராஜராஜ சோழன் சோழ மன்னன் ராஜ ராஜ சோழன் தஞ்சை கோயிலைக்கட்டிய வரலாறு அத்துடன் ராஜேந்திர சோழன் மற்றும் வேங்கி நாட்டு விடுதலை, விமலாதித்தன், குந்தவை என பல பாத்திரங்களை கொண்டது. படம் ராஜராஜ சோழனாக சிவாஜி கணேசனும், அவரது மகன் ராஜேந்திர சோழனாக சிவகுமாரும், வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனாக முத்துராமனும், குந்தவையாக லட்சுமியும் நடித்திருப்பார். வேங்கி நாட்டின் குல குருவாக பாலதேவராக நம்பியார் நடித்திருப்பார்.

     ராஜராஜ சோழன், விமலாதித்தன், வேங்கி நாட்டு அரசியல், குந்தவை

    ராஜராஜ சோழன், விமலாதித்தன், வேங்கி நாட்டு அரசியல், குந்தவை

    ராஜராஜ சோழன் நாட்டை பரிபாலனம் செய்வதும், தஞ்சை கோயிலை கட்டுவதும், அவ்வப்போது மகளிடம் அன்பு காட்டுவதும், மகன் ராஜேந்திர சோழனுடன் ராஜ்ஜிய காரியங்களை பேசுவதும், மகளை காதலிக்கும் வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனின் (முத்துராமன்) சுயகவுரவத்தை மதிப்பதும் அதே நேரம் மகள் விருப்பத்தை கடைசி நேரத்தில் நிகழ்த்துவதும் சிவாஜி மன்னன், தந்தை, ராஜதந்திரி என்பதை படம் முழுவதும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பார்.

     சிவாஜி கணேசன், நம்பியார் நடித்த சுவைமிகு காட்சி

    சிவாஜி கணேசன், நம்பியார் நடித்த சுவைமிகு காட்சி

    சோழமன்னனாக வேங்கி நாட்டு குலகுரு பாலதேவர் (நம்பியார்) சூழ்ச்சி பற்றி அறியாதவர் போல் நடிப்பார். நம்பியாருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக என்ன மன்னர் இப்படி இருக்கிறாரே என்று இளவரசன் ராஜேந்திர சோழன், குந்தவை உள்ளிட்டோரே வெறுக்கும் அளவுக்கு மன்னர் நடப்பார். ஒரு கட்டத்தில் நம்பியார் பேச்சை அப்படியே கடைபிடிப்பார் சிவாஜி இதனால் ராஜ்ஜியமே பறிபோகும் நிலை உருவாகிறது. ஆனால் கடைசி நேரத்தில் நம்பியாரிடம் பணியாற்றும் ஒற்றனாக ராஜராஜ சோழனே நடித்தது தெரியாமல் உளறி கொட்டி சிக்குவார் நம்பியார்.

     அந்த கால பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படம் ராஜராஜ சோழன்

    அந்த கால பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படம் ராஜராஜ சோழன்

    படத்தில் பெரிய அளவில் போர்க்காட்சிகள் இல்லாவிட்டாலும் படம் முழுவதும் ராஜராஜ சோழனாக சிவாஜியின் ஆளுமை படத்தை வெற்றிகரமாக ஓடவைத்தது. அந்த காலத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படமாக இருந்தது. இந்தப்படத்தில் வசனம், படமாக்கிய விதம், சினிமாஸ்கோப் டெக்னாலஜி, குன்னக்குடி வைத்தியநாதன் இசை, டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.வரலட்சுமியின் நடிப்பும், குரலும் என ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சிவாஜி கணேசன் நம்பியாரின் சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லும் காட்சிகள் ரசிக்கத்தக்கவையாக இருக்கும்.

    English summary
    Rajaraja Cholan Shivaji's pride can be seen when celebrating Ponni's wealth and seeing the behaviour of its heroes. Shivaji Ganesan's performance as Rajaraja Chola and Kundavai's father as a king who excelled in diplomacy will give us shivers. Today is the birthday of Sivaji Ganesan who showed great majesty as an example of what a king looks like Rajaraja Chola, Veerapandiya Kattabomman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X