பொளக்கட்டும் பற பற.. பொன்னியின் செல்வன்.. அடுத்த பாடல் அந்த ஹீரோவுக்கா? எப்போ வருது தெரியுமா?
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொன்னி நதி பார்க்கணுமே பொழுதுக்குள்ள என வந்தியத்தேவன் கார்த்தி பொன்னி நதியின் அழகை வர்ணித்தும் பாடும் ஓப்பனிங் பாடல் வெளியாகி 10 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள அடுத்த பாடல் எந்த ஹீரோவுக்கு, எப்போது வெளியாகிறது போன்ற தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம்
டோலிவுட்டின் பாகுபலி படத்தை எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் தினம் தோறும் திருவிழாவுக்குச் செல்வது போல தியேட்டருக்குச் சென்று பார்த்து மிகப்பெரிய வசூல் படமாக மாற்றினர். இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களையும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். நேற்று வெளியான பிம்பிசாரா படத்தை தெலுங்கு ரசிகர்கள் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கதை நன்றாக இருப்பதால் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொன்னி நதி பார்க்கணுமே
ஓடத்தில் இருந்து கீழே விழுந்த அருள்மொழி வர்மனை மீண்டும் ஓடத்திற்கே தூக்கிக் கொண்டு வந்து விட்டு காப்பாற்றி அவனுக்கு பொன்னியின் செல்வன் என்கிற பெயர் கிடைக்க காரணமாக இருந்த பொன்னி நதியை பார்க்கணுமே எனத் தொடங்கும் அறிமுக பாடல் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை மற்றும் குரலில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த பாடலில் வரும் நஞ்சைகளே புஞ்சைகளே ரம்பைகளை விஞ்சிநிற்கும் வஞ்சிகளே வரிகள் அருமை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டாவது சிங்கிள்
வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த மாதம் முழுவதும் படு பிஸியாக புரமோஷன் செய்தால் தான் படம் முதல் நாளில் பல கோடிகளை வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரண்டாவது பாடலை படக்குழுவினர் எப்போது வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதித்த கரிகாலனின் போர் பாடல்
நந்தினி ஐஸ்வர்யா ராயை நினைத்து ஆதித்த கரிகாலன் விக்ரம் கள்ளும், பாட்டும், போதையும் என புலம்புவதோடு கூடி வரும் பாடல் தான் இரண்டாம் பாடலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பாடல் வெளியாகலாம் என்றும் அல்லது ஆகஸ்ட் 18 வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போ ஜெயம் ரவிக்கு
கார்த்தியின் பாடல் வெளியான நிலையில், அடுத்ததாக அண்ணன் ஆதிக்க கரிகாலன் சியான் விக்ரமின் பாடல் வெளியாகும் என்றும் அடுத்ததாக பொன்னியின் செல்வன் ஜெயம் ரவியின் காதல் பாடல் படகோட்டி பெண் ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அத்தனை பாடல்களும் வேறலெவலில் ஹிட்டாகும் என ரசிகர்கள் கன்ஃபார்மே செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











