மணிரத்னம் செய்வார்னு பார்த்தால் சவுந்தர்யா ரஜினிகாந்த் முந்திக்கிட்டாரே!
Recommended Video

சென்னை: மணிரத்னத்திடம் எதிர்பார்த்த விஷயத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் செய்கிறார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பிடிக்காது என்று யாராலும் சொல்ல முடியாது. பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கப் போவதாக கூறப்பட்டது. அதில் முன்னணி நடிகர் ஒருவர் வந்தியத்தேவனாக நடிக்கிறார் என்றும் பேச்சு கிளம்பியது.

பொன்னியின் செல்வனை படமாக்கினால் பிரபாஸ், ராணா போன்று ஆஜானுபாகுவான ஆட்கள் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. பொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் அறிவிப்பு வெளியிட மாட்டாரா என்று காத்திருந்த நேரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி வெப் சீரீஸ் எடுக்கப்படுகிறது. சூரி பிரதாப் இயக்கும் அந்த தொடரை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். இந்த விஷயத்தில் சவுந்தர்யா மணிரத்னத்தை முந்திக் கொண்டார்.
என்ன தான் வெப் சீரீஸ் வந்தாலும் பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனை படமாக்குவது லேசான காரியம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











