பொன்னியின் செல்வன்..சிம்பு நடித்தால் நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னேனா?..ஜெயம் ரவி விளக்கம்

பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பல விஷயங்களை மனம் திறந்து படக்குழுவினர் பேசினர்.

பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தால் நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னேனா என்பது பற்றி ஜெயம் ரவி விளக்கமளித்தார்.

தன்னிடம் இதுகுறித்து சிலம்பரசன் பேசியதாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார்.

 எதிர்ப்பார்ப்பில் வெளி வரும் பொன்னியின் செல்வன்

எதிர்ப்பார்ப்பில் வெளி வரும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படம் பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வரும் செப்.30 அன்று வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கூடுதல் பலம். இன்னொருபுறம் இது மணிரத்னம் படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த படக்குழு

செய்தியாளர்களை சந்தித்த படக்குழு

பொன்னியின் செல்வன் வரும் செப் 30 அன்று வெளியாக உள்ளது. செப்.29 தனுஷின் நானே வருவேன் வெளியாகிறது. அதனால் போட்டி இருக்கும் என்கிற நிலையில் பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. சரியானபடி பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் செல்லவில்லை என்று கூறப்ப்டுகிறது. இந்நிலையில் ஒன்று பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சிம்புவுடன் மோதலா? பிரச்சினையை தொட்ட ஜெயம் ரவி

சிம்புவுடன் மோதலா? பிரச்சினையை தொட்ட ஜெயம் ரவி

அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு மணிரத்னம், கார்த்தி, பார்த்திபன், ஜெயம்ரவி உள்ளிட்டோர் பதிலளித்தனர். பொன்னியின் செல்வன் படபிடிப்பு ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு பிரச்சினை சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலானது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்ததாகவும், சிம்பு நடிப்பதாக இருந்தால் தான் இந்த படத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஜெயம் ரவி கூறியதாக தகவல் வெளியானது.

நான் சொன்னால் கேட்கிற ஆளா மணிரத்னம்-ஜெயம் ரவி

நான் சொன்னால் கேட்கிற ஆளா மணிரத்னம்-ஜெயம் ரவி

இதுகுறித்து அப்போது ஜெயம்ரவியோ படக்குழுவினரோ பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்தப்பிரச்சினையை இன்று தீர்த்துவைத்தார் ஜெயம் ரவி. அவர் பேசும்போது "நான் சிம்பு நடித்தால் நடிக்க மாட்டேன் விலகி கொள்கிறேன் என்று சொன்னதாக சொல்கிறார்கள், நினைச்சா சிரிப்புத்தான் வருது, நான் சொன்னால் கேட்கிற ஆளா மணி ரத்னம் சார். நான் சொன்னால் கேட்கும் குழுவா இது. எனக்கும் சிம்புவுக்கும் அப்படி என்ன பிரச்சினை இருக்கு" என்று கேட்டார்.

சிம்புவின் பெருந்தன்மை

சிம்புவின் பெருந்தன்மை

இதைவிட ஒரு காமெடி சொல்கிறேன் கேளுங்கள், இந்தப்பிரச்சினை பெருசா இருக்கும்போது சிம்பு எனக்கு போன் செய்தார், "மச்சி இந்த மாதிரி சொல்கிறார்கள் என்று எதுவும் ஃபீல் பண்ணாத கண்டுக்காதே" என்று சொன்னார். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினையை ஜெயம்ரவி இன்று முடித்து வைத்துள்ளார். ஜெயம்ரவியும், சிம்புவும் பேசியதையும் சிம்புவின் பெருந்தன்மை பற்றியும் அவர் மூலம் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X