WOMEN ஐ ஃபாலோ பண்ணுங்க...MEN ஐ தொடுவதை அவாய்ட் பண்ணுங்க...இது தான் பொன்னியின் செல்வன் ரூல்ஸ்
புதுச்சேரி : மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் பற்றிய தகவல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கொரோனாவால் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது புதுச்சேரியில் துவங்கப்பட்டுள்ளது.
ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்கும் இந்த படப்பிடிப்பில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஷுட்டிங்கில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் கண்டிப்பாக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அது என்னங்க WOMEN, MEN
நடிகர், நடிகைகள் அனைவரும் செட்டில் WOMEN ஐ ஃபாலோ பண்ணனுமாம், MEN ஐ தொடுவதை அவாய்ட் பண்ணனுமாம். இது பாத்துட்டு தப்பா நினைச்சுக்காதீங்க. இது கொரோனா தடுப்பு நடவடிக்கை தான். அனைவரின் கவனத்தையும் ஈர்க்க இப்படி சுருக்கி சொல்லப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.

இது தான் விஷயமா
இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், WOMEN என்பதில் W-wash your hands, O-obey social distancing, M-mask up,E-eat well, N-no unneccessary travelling என்பதை தான் குறிக்கிறதாம். இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்.

இதெல்லாம் பண்ணக் கூடாதாம்
இதே போல் MEN என்பது M-mouth E-eye N-nose ஆகியவற்றை குறிக்கிறதாம். இதற்காக தான் WOMEN ஐ ஃபாலோ பண்ணனும், MEN ஐ தொடுவதை தவிர்க்கனுமாம். இது ஷுட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் இல்லையாம், உலகிற்கும் சொல்வதற்கு தானாம்.

இரண்டு பாகங்களாக ரிலீஸ்
பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதை படக்குழுவினர் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர். வரலாற்று படமான PS1 2022 ம் ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











