twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள்… பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அல்டிமேட் வீடியோ

    |

    சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க நிறையபேர் முயற்சி செய்தனர்.

    இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில், கல்கியின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்

    கனவு நனவான தருணம்

    கனவு நனவான தருணம்

    தமிழ் இலக்கிய உலகில் கொண்டாடப்படும் படைப்புகளில் ஒன்று கல்கியின் எழுத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' நாவல். 1951 முதல் 1954 வரை ஒவ்வொரு பாகங்களாக வெளிவந்த இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட பலரும் முயற்சித்தனர். மணிரத்னமும் தொடர்ந்து முயன்று வந்த நிலையில், தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. மல்டி ஸ்டார் திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    கல்கிக்கு நன்றி சொன்ன மணிரத்னம்

    கல்கிக்கு நன்றி சொன்ன மணிரத்னம்

    சோழர்களின் வரலாற்றை பின்னனியாகக் கொண்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், பாத்திரங்களின் வடிவமைப்பும் விவரிப்பும் அற்புதமாக இருக்கும் என வாசகர்கள் புகழ்வதுண்டு. இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னையில் பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேடையேறிய இயக்குநர் மணிரத்னம், முதலில் கல்கிக்கு நன்றி கூறிய பின்னரே தனது பேச்சைத் தொடங்கினார்.

    கல்கியின் 123வது பிறந்தநாள்

    கல்கியின் 123வது பிறந்தநாள்

    இந்த நிலையில், அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள் நேற்று கொண்டாப்பட்டது. சிவகாமியின் செல்வன், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் என வரலாற்று புதினங்களை எழுதியுள்ள கல்கி, ஏராளமான நாவல்களையும், 75க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியவுலகில் அதிகம் கொண்டாடப்படும் கல்கியின் படைப்புகள் அனைத்தும் நாட்டுமையாக்கப்பட்டதால், அவரது படைப்புகள் எளிதாக கிடைக்கின்றன

    சிறப்பு வீடியோவுடன் வாழ்த்து

    சிறப்பு வீடியோவுடன் வாழ்த்து

    இதனிடையே கல்கியின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு, பொன்னியின் படக்குழு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், எழுத்தாளகள் கெளரி ராமநாராயணன், பாரதி பாஸ்கர், கார்த்திகேயன், பாம்பே கண்ணன் ஆகியோ, கல்கியின் எழுத்தையும் பொன்னியின் செல்வன் நாவலையும் பற்றி விவரித்து பேசியுள்ளனர். பொன்னியின் செல்வன் படக்க்ழு வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    English summary
    Kalki's Ponniyin Selvan novel has been made into a movie, directed by Mani Ratnam. This film will hit theaters on the 30th. Now on the occasion of Kalki's 123rd birthday, the Ponniyin Selvan team has released a video about her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X