சுந்தர சோழர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன்: பொன்னியின் செல்வன் டீம் வெளியிட்ட அடுத்த அப்டேட்
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்தப் படம் வரும் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
வரும் 6ம் தேதி பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
மணிரத்னம் இயக்கியுள்ளா 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், அதிகமான பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம், செப்டம்பர் 30ம்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான சில பான் இந்தியா படங்கள் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தன. அதேபோல், கோலிவுட்டின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், இப்போது மணிரத்னம் இயக்கத்தில் சாத்தியாமகியுள்ளது. அதனால், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆடியோ, ட்ரெய்லர் வெளியீடு
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தில் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நாளை மறுநாள் (செப் 6ம் தேதி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே பொன்னி நதி, சோழா சோழா பாடல்கள் வெளியாகி, ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய போஸ்டர்கள் வெளியானது
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும் நடிக்கின்றனர். அதேபோல் ஐஸ்வர்யா ராய் நந்தினி கேரக்டரிலும், த்ரிஷா குந்தவையாகவும் நடித்துள்ளனர். அதேபோல், மேலும் பல முக்கியமான பாத்திரங்களை அறிமுகம் செய்து படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பிரகாஷ்ராஜ், நடிகர் ரஹ்மான், ஜெயச்சித்ரா ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு
இந்த போஸ்டரில் சுந்தர சோழராக பிரகாஷ் ராஜும், செம்பியன் மாதேவியாக ஜெயச்சித்திராவும் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் மதுராந்தகராக ரகுமான் நடித்துள்ளதையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு என்ற கேப்ஷனுடன், இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனிடையே சுந்தர சோழர் தவிர்த்த மற்ற இரு பாத்திரங்களும், பொன்னியின் செல்வன் டீசரில் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வெளியான போஸ்டர்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











