அந்த அரபிக் கடலோரம்… இன்று மும்பையில் ரசிகர்களை சந்திக்கும் பொன்னியின் செல்வன் டீம்

மும்பை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் ரிலீஸை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பல்வேறு நகரங்களில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

சென்னை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் குழுவினர் இன்றும் ரசிகர்களை சந்திக்கின்றனர்.

ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் பத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற டாப் ஸ்டார்ஸ்களை ஒன்றாக திரையில் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் நேரில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் டூர்

பொன்னியின் செல்வன் டூர்

பொன்னியின் செல்வன் தமிழில் உருவாகி இருந்தாலும், பான் இந்தியா படமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. அதுமட்டும் இல்லாமல் எம்ஜிஆர் முதல் கமல் வரை பலரும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சித்து அது முடியாமல் போனது. அதனால், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை காண, ரசிகர்களிடம் நாளுக்குநாள் எதிபார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னையில் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வந்த பொன்னியின் செல்வன் டீம், அதனை முடித்துவிட்டு கொச்சி சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற பொன்னியின் செல்வன் டீம், நேற்று ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்தனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு ஆகியோரை ஒரேமேடையில் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த பொன்னியின் செல்வன் படம் குறித்த பல சுவாரஸ்யங்களையும் படக்குழுவினர் பகிர்ந்துக் கொண்டனர்.

இன்று மும்பையில் சந்திப்பு

இன்று மும்பையில் சந்திப்பு

கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் என ரவுண்டு கட்டிய பொன்னியின் செல்வன் டீம், இன்று மும்பை செல்கின்றனர். மும்பையில், ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் குழுவினரை வரவேற்பை மும்பை ரசிகர்களும் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு காணப்படும் உற்சாக வரவேற்பு, படத்துக்கும் பெரிய பலமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால், கோலிவுட்டுக்கு மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் ஒன்று கன்ஃபார்ம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X