ஆண்களின் உலகில் தைரியமான பெண்...குந்தவையாக வந்த த்ரிஷா...கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி உள்ளது பொன்னியின் செல்வன். 1955 ம் ஆண்டு கல்கி கிருஷ்ணமுர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் ஜுலை முதல் வாரத்தில் வெளியாகும், தஞ்சையில் டீசர் ரிலீஸ் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசர் ரிலீஸ் தள்ளி போவதாக மற்றொரு தகவலும் பரவியது.

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்

இதற்கிடையில் சமீபத்தில், வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. போர்க்களத்தில் சோழர்களின் கொடி பட்டொளி வீசி பறப்பதை போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு, சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.

ஆர்வத்தை துண்டிய படக்குழு

ஆர்வத்தை துண்டிய படக்குழு

சொன்னபடியே தினமும் ஒரு கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். அடுத்து யாருடைய போஸ்டர், என்ன அறிவிப்பு வரப் போகிறது என்ற ஆர்வத்தை அனைவரின் மனதிலும் ஏற்படுத்தி விட்டனர் படக்குழுவினர்.

அசத்தலாக வந்த ஆதித்ய கரிகாலன்

அசத்தலாக வந்த ஆதித்ய கரிகாலன்

இந்நிலையில் சமீபத்தில், படத்தில் விக்ரம் நடிக்கும் ஆதித்ய சோழன் கேரக்டரின் மாஸான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சோழ பட்டத்து இளவரசன்...மாபெரும் போர்வீரன்...காட்டுப்புலி...ஆதித்ய கரிகாலன் என்ற கேப்ஷனுடன் போர்ப்படைகள் சுழ குதிரை மீது அமர்ந்து வரும் விக்ரமின் போஸ்டரை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிட்டுள்ளன.

வந்து விட்டான் வந்தியத் தேவன்

வந்து விட்டான் வந்தியத் தேவன்

விக்ரமின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டரை எப்போ வெளியிடுவீங்க என ஆர்வமாக கேட்டனர். ரசிகர்கள் பல நாட்களாக ஆர்வமாக கேட்டு வந்த வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ள கார்த்தியின் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. ராஜ்யம் இல்லா இளவரசன்..உளவாளி..கைதேர்ந்த சாகசக்காரன்...இதோ வந்துவிட்டான் வந்தியத்தேவன் என்ற கேப்ஷனுடன் கார்த்தியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தி கம்பீரமாக குதிரை மீது போஸ் கொடுக்கும் போஸ்டருக்கு லைக்குகள் குவிகிறது.

ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அறிமுகமா

ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு அறிமுகமா

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி போஸ்டர்களை தொடர்ந்து இன்று ஐஸ்வர்யா ராயின் கேரக்டரான நந்தினியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அழகிய பழிவாங்கும் முகம்...இவள் தான் நந்தினி. பழுவூரின் அரசி என்ற கேப்ஷனுடன் ஐஸ்வர்யாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

Ponniyin Selvan | பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை *Kollywood | Filmibeat Tamil
அழகாக வந்த குந்தவை தேவி

அழகாக வந்த குந்தவை தேவி

ஐஸ்வர்யா ராயின் நந்தினி போஸ்டரை தொடர்ந்து இன்று குந்தவை தேவி கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆண்களின் உலகில் வீரம் நிறைந்த பெண் குந்தவை இளவரசி என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதையும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X