For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பொன்னியின் செல்வன் டீசர்.. அடேங்கப்பா இது பாகுபலியையே மிஞ்சிடும் போலயே.. பிரம்மாண்டத்தின் உச்சம்!

  |

  சென்னை: லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார்.

  Recommended Video

  வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

  அதன் அட்டகாசமான டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

  பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, த்ரிஷா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

  காலைல 7.30க்கு குதிரையில ஏறி மாலை 5.30 மணி வரைக்கும் டயலாக் பேசினாரு.. விக்ரம் டெடிகேஷனை பாருங்க! காலைல 7.30க்கு குதிரையில ஏறி மாலை 5.30 மணி வரைக்கும் டயலாக் பேசினாரு.. விக்ரம் டெடிகேஷனை பாருங்க!

  சூர்யா வெளியீடு

  சூர்யா வெளியீடு

  பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரது கனவை தற்போது நனவாக்கி உள்ளார் இயக்குநர் மணிரத்னம் என நடிகர் சூர்யா ட்வீட் போட்டு பொன்னியின் செல்வன் தமிழ் டீசரை வெளியிட்டுள்ளார். டீசரின் ஆரம்ப காட்சி முதல் கடைசி காட்சி வரை அனல் பறக்கிறது. தமிழில் இப்படியொரு வரலாற்று படமா என வாய் பிளக்க வைத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

  யானை மீது வரும் விக்ரம்

  யானை மீது வரும் விக்ரம்

  நடிகர் விக்ரமுக்கு நெஞ்சு வலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கேட்டதுமே ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது ஆதித்த கரிகாலனாக யானை மீது கோட்டை வாயில் கதவை உடைத்துக் கொண்டு விக்ரம் வரும் காட்சியும், போர்க்களத்தில் அவர் சண்டை செய்யும் காட்சிகளையும் பொன்னியின் செல்வன் டீசரில் பார்த்த ரசிகர்கள் நடிகர் விக்ரமின் அயராத உழைப்பை பாராட்டி வருகின்றனர். இப்படி உழைக்கும் மனுஷனுக்கு லேசான காய்ச்சல் வருவது சகஜம் தான்ப்பா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  ஐஸ்வர்யா ராய் அட்டகாசம்

  ஐஸ்வர்யா ராய் அட்டகாசம்

  நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் எப்படி பொருந்தப் போகிறார் என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், எந்திரன், ஜோதா அக்பர் படங்களில் பார்த்ததை விட அத்தனை அழகாகவும், மிரட்டலாகவும் காட்சி அளிக்கிறார் ஐஸ்வர்யா ராய். அவரும் குந்தவை த்ரிஷாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் அந்த காட்சி நிச்சயம் திரையில் தீப்பிடிக்கும்.

  அந்த க்ரீடத்தில் அவ்வளவு அழகு

  அந்த க்ரீடத்தில் அவ்வளவு அழகு

  பொன்னியின் செல்வன், அருள்மொழி வர்மன், ராஜராஜ சோழன் என பல பெயர்களுடன் பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் ஜெயம் ரவி க்ரீடம் அணிந்து கொண்டு போரில் சண்டையிடும் காட்சிகளிலும் தனது ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கி நடித்துள்ளார். இதுவரை இப்படியொரு ஜெயம் ரவியை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிருக்க மாட்டார்கள்.

  பாகுபலியை மிஞ்சிடும் போல

  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களின் கதாபாத்திரங்களும் பொன்னியின் செல்வன் டீசரில் இடம்பெற்று வெயிட்டு காட்டுகின்றன. பாகுபலி படத்தை மிஞ்சும் அளவுக்கு டீசர் இருப்பதாக பொன்னியின் செல்வன் டீசரை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  வந்தியத்தேவனாக கார்த்தி

  வந்தியத்தேவனாக கார்த்தி

  ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஆளுக்கொரு பக்கம் மிரட்ட, ஒட்டுமொத்த கதையையும் நகர்த்தும் நாயகன் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார். டீசரில் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள்ளே அப்படியே நிற்கிறது. மேலும், படகோட்டியாக வரும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட நடிகர்களும் நாவலில் வந்த கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு வந்துள்ளனர்.

  ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை

  ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை

  போர்க் காட்சிகள், அரசியல் விளையாட்டுகள் என நிறைந்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது. பண்டைய இசைக் கருவிகளை கண்டறிந்து இந்த படத்திற்காக அவர் பல ஆராய்ச்சிகளை செய்து பணியாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு விக்ரம் படத்தைத் தொடர்ந்து இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட்டை பொன்னியின் செல்வன் தர வருகிறான்.

  அமிதாப் பச்சன் டு சூர்யா

  அமிதாப் பச்சன் டு சூர்யா

  பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது அதன் இந்தி டீசரை அமிதாப் பச்சனும், மலையாள டீசரை மோகன்லாலும், தெலுங்கு டீசரை மகேஷ் பாபுவும் கன்னட டீசரை ரக்‌ஷித் செட்டியும் தமிழ் டீசரை நடிகர் சூர்யாவும் வெளியிட்டுள்ளனர். வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக போகிறது.

  English summary
  பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு (‘Ponniyin Selvan’ Teaser Launch Updates in Tamil) :[
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X