twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன்..தமிழரின் பெருமை.. நடிகை த்ரிஷா பெருமிதம் !

    |

    சென்னை : பொன்னியின் செல்வனின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை த்ரிஷா பேசினார்.

    Recommended Video

    வெளியானது Ponniyin Selvan Part 1 Teaser... கொண்டாடத்தில் ரசிகர்கள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டீசரைப்பார்த்த ரசிகர்கள் இணையத்தில் டீசரை கொண்டாடி வருகின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடித்து கிராபிக்ஸ், பின்னணி இசைகோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளை நடைபெற்று வருகின்றன.

    எம்ஜிஆரும், ரஜினிகாந்தும் பொன்னியின் செல்வனும்..நாவலின் கேரக்டர் பெயர்களை அடுக்கி அசத்திய ரஜினிஎம்ஜிஆரும், ரஜினிகாந்தும் பொன்னியின் செல்வனும்..நாவலின் கேரக்டர் பெயர்களை அடுக்கி அசத்திய ரஜினி

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    அமரர் கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் உருவாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் இக்கதையைப் படமாக எடுக்க முயற்சித்தார். ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

    நட்சத்திர பட்டாளம்

    நட்சத்திர பட்டாளம்

    இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார் என ஏராளமான நட்சத்திரபட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளான பாண்டிச்சேரி, ஹைதராபாத், கோட்டை நகரான குவாலியரில் நடந்து முடிந்துள்ளது.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய நடிகை த்ரிஷா, பொன்னியின் செல்வன் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் படம். அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்போகிறோம். புதிதாக சினிமாவுக்கு வருபவர்களாக இருந்தாலும், பெரிய நடிகராக இருந்தாலும் மணி சார் படத்தில் நடிக்க விரும்புவார்கள். அந்த வகையில் நான் மணி சாரோட குந்தவை.. இதுவே எனக்கு போதும் என நடிகை த்ரிஷா நெகிழ்ந்து பேசினார்.

    பான் இந்தியா படம்

    பான் இந்தியா படம்

    இப்போது நிறைய பான் இந்திய திரைப்படங்கள் வருகின்றன. பான் இந்தியா கான்செப்ட்டை முதலில் கொண்டு வந்தவர் மணிரத்னம். ரோஜா படத்திலேயே மணி சார் அதை செய்து விட்டார். இன்றைக்கு சவுத் இந்திய திரைப்படத்தை அனைவரும் ரசித்துப் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பான் இந்தியா படம் பொன்னியின் செல்வன் என்றார்.

    English summary
    Ponniyin Selvan Teaser Launch function Trisha speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X