2 நாளில் இத்தனை மில்லியன் வியூசா...டீசரிலேயே சாதனையை துவக்கிய பொன்னியின் செல்வன்

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி உருவாக்கிய அதே சுவாஸ்ரயத்தை காட்சியில் கொண்டு வர மணிரத்னம் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது டீசரில் நன்கு தெரிந்தது.

இந்த படம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வகையிலான ஒரு படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முதன்முதலாக எம்ஜிஆர் 1958ஆம் ஆண்டு படமாக்க முயற்சி செய்தார். கல்கி அவர்களிடமிருந்து அந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் கொடுத்து இந்த நாவலை படமாக்க உரிமை பெற்றார்.

ஆனால் அவரால் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முடியவில்லை. அதேபோல் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்து ஆரம்ப கட்டத்திலேயே அந்த முயற்சி கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.மணிரத்னம் 1980 களில் துவங்கி மூன்று முறை இந்த படத்தை எடுக்க முயற்சித்ததாக டீசர் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

இந்த படம் பலமுறை முயற்சித்து கைவிடப்பட்டதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது மிகப்பெரிய பட்ஜெட். அதை விட கற்பனையில் பிரம்மிக்க வைக்கும் பல காட்சிகளை எப்படி திரையில் கொண்டு வர முடியும். இது மிகப் பெரிய சவால் என்பது தான் பலரும் இந்த படத்தை எடுக்க முயற்சித்தும், ஆரம்பத்திலேயே கைவிட்டதற்கு முக்கிய காரணம்.

Ponniyin Selvan teaser makes new record and receives 20 million views in 2 days

கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் லைகா ப்ரெடக்ஷன்ஸ் உடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இந்த படத்தை தயாரித்து முடித்துள்ளது. செப்டம்பர் 30 ம் தேதி படத்தின் முதல் பாகம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக சோழன் வருகிறான் என்ற கேப்ஷனுடன் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். பிறகு முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசரை ஒட்டுமொத்தமாக பார்த்தால் பிரம்மாண்டம் என ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். ஆனால் டீசரின் ஒவ்வொரு ஷாட்டையும் நன்கு கவனித்து பார்த்தால் படத்தின் கதை, ட்விஸ்ட் என அனைத்தையும் ஒவ்வொரு இடத்திலும் வைத்துள்ளனர்.பொன்னியின் செல்வன் டீசரை கூர்ந்து பார்த்தவர்களால் பொன்னியின் செல்வன் நாவலை மீண்டும் புரட்டி பார்க்காமல் இருக்க முடியாது.

Recommended Video

Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood

டீசரே இப்படி இருக்கிறது என்றால் படத்தின் டிரைலர் எப்படி இருக்கும், படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க துவங்கி விட்டனர். நிச்சயம் பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்பதை படத்தின் டீசரே உறுதி செய்துள்ளது. யூட்யூப்பில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில் 20 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X