Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் ஒத்திவைப்பு... ஏன் என்னாச்சு...இதுதான் காரணமா?
சென்னை : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக, மிகப் பெரிய வரலாற்றுக் காவியமாக உருவாக்கப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன் படம். தமிழில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஜெயராம், லால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்தினம் அதே பெயரில் சினிமாவாக உருவாக்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லீக்கானது பொன்னியின் செல்வன் ஸ்டில்லா? கரிகாலன் ஸ்டில்லா?...குழப்பத்தில் ரசிகர்கள்

வெளியீட்டு உரிமம் இவங்களுக்கு தான்
பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமங்களும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜுலை 7 ல் டீசர் ரிலீஸ்
இந்நிலையில் ஜூலை 7 ம் தேதி சோழ மண்டலம் தஞ்சாவூரில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த விழாவில், பங்கேற்க படத்தின் நடிகர் மற்றும் நடிகைகளிடம் கால்ஷீட் பெறப்பட்டு இருந்தது.

டீசர் ரிலீஸ் ஒத்திவைப்பு
விழாவிற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு, டீசர் வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தஞ்சாவூரில் நடைபெறவிருந்த டீசர் வெளியீட்டு விழா கைவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தான் காரணமா
சில கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஜுலை 7 ம் தேதி டீசருக்கான ப்ரோமோ வீடியோவை (டீசருக்கான க்ளிம்ப்ஸ்) மட்டும் வெளியிட டைரக்டர் மணிரத்னம் திட்டமிட்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் டீசர் எப்போ
கிராஃபிக்ஸ் வேலைகள் முடிக்கப்பட்ட பிறகு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவிருந்த பொன்னியின் செல்வன் டீசர், ஜூலை இறுதி வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னது...இதுவே கிடையாதா
இதற்கிடையில் மற்றொரு தகவலாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சையில் நடத்தும் எண்ணத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என இதுவரை வெளியிடப்படவில்லை.