Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சோழ பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலன்... பொன்னியின் செல்வனில் விக்ரமின் அசத்தல் போஸ்டர் வெளியீடு
சென்னை : டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி உள்ளது பொன்னியின் செல்வன். கல்கி எழுதி பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கி முடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் ஜுலை முதல் வாரத்தில் வெளியாகும், தஞ்சையில் டீசர் ரிலீஸ் விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசர் ரிலீஸ் தள்ளி போவதாக மற்றொரு தகவலும் பரவியது.
பாகுபலி
மாதிரி
கேட்டா...அதையே
சுட்டிருக்கீங்களே...பொன்னியின்
செல்வனை
கலாய்க்கும்
நெட்டிசன்ஸ்

பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர்
இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன் வருகிறார் சோழன் என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. போர்க்களத்தில் சோழர்களின் கொடி பட்டொளி வீசி பறப்பதை போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு, சாகசம் நிறைந்த வாரத்திற்கு தயாராகுங்கள் எனவும் படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர்.

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் மோஷன் போஸ்டரும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. இதனால் இந்த வாரம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியாக போகிறதா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். ஆனால் அது போன்ற எந்த அறிவிப்பும் மோஷன் போஸ்டரில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், படத்தின் ரிலீஸ் தேதி மட்டுமே இடம்பெற்றிருந்தது.

அசத்தலாக வந்த ஆதித்ய கரிகாலன்
இந்நிலையில்
இன்று,
படத்தில்
விக்ரம்
நடிக்கும்
ஆதித்ய
சோழன்
கேரக்டரின்
மாஸான
போஸ்டர்
வெளியிடப்பட்டுள்ளது.
சோழ
பட்டத்து
இளவரசன்...மாபெரும்
போர்வீரன்...காட்டுப்புலி...ஆதித்ய
கரிகாலன்
என்ற
கேப்ஷனுடன்
போர்ப்படைகள்
சூழ
குதிரை
மீது
அமர்ந்து
வரும்
விக்ரமின்
போஸ்டரை
லைகா
மற்றும்
மெட்ராஸ்
டாக்கீஸ்
இணைந்து
வெளியிட்டுள்ளன.

வந்தியதேவனுக்கு தான் வெயிட்டிங்
படத்திற்காக மரண வெயிட்டிங்கில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆதித்ய கரிகாலன் செமயா இருக்கார். ஆனால் நாங்க வந்தியைத்தேவனை பார்க்கத் தான் ஆர்வமாக உள்ளோம். டீசர் எப்போது வெளியிடுவீங்கன்னு சொல்லவே மாட்றீங்களே என ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.