»   »  எளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...! - பொன்ராஜ் புகழாரம்

எளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...! - பொன்ராஜ் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் இன்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினிக்கு அப்துல் கலாம் மற்றும் தான் எழுதிய புத்தகங்களைப் பரிசாகத் தந்தார் பொன்ராஜ்.

Ponraj Meets Rajinikanth and praises to sky high

இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழமாக ரஜினி விவாதித்ததாக பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Ponraj Meets Rajinikanth and praises to sky high

மேலும், ரஜினிகாந்த் அவர்கள் மிகச் சிறந்த மனிதர், மனிதாபிமானி, எளிமையானவர் என்பது மட்டுமல்ல, உண்மையில் ஒரு தொலைநோக்குப் பார்வை மிக்கவர் என்றும் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Ponraj Meets Rajinikanth and praises to sky high

அப்துல் கலாம் மறைவின்போது, முதலில் அவருக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி, அவரைப் போன்ற மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது பெருமை என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்த சந்திப்பின்போது ரஜினி, பொன்ராஜின் நண்பரும் உடனிருந்தார்.

English summary
Late President Abdul Kalam's Science adviser Ponraj has met Superstar Rajinikanth and presented Kalam's books today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil