»   »  'லேட்' ஆன ரஜினி முருகன்… திருப்பதி பிரதர்ஸை சீண்டிய இயக்குநர் பொன்ராம்

'லேட்' ஆன ரஜினி முருகன்… திருப்பதி பிரதர்ஸை சீண்டிய இயக்குநர் பொன்ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திக்கேயன் நடித்த ரஜினி முருகன் படம் தாமதம் ஆவதால், அப்படத்தின் இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது கடும் கோபம் அடைந்துள்ளார். அதனை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் கிண்டலாக கருத்திட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ரஜினி முருகன். இந்தப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.


திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. இதனால் படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.


ரிலீஸ் ஒத்திவைப்பு

ரிலீஸ் ஒத்திவைப்பு

சென்சார் பணிகள் முடிந்தவுடன் 'ரஜினி முருகன்' வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தது. சென்சார் பணிகள் முடிந்தவுடன் செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியது. ஆனால், இதற்கு முன்பு கடனை அடைத்தால் மட்டுமே இப்படத்தை வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் செப்டம்பர்17ம் தேதி இப்படம் வெளியாகவில்லை.


டுவிட்டரில் கிண்டல்

'ரஜினி முருகன்' தாமதத்தால் இயக்குநர் பொன்.ராம் "என்னதான் திருப்பதி உண்டியலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டினாலும் கடனை அடைக்க முடியவில்லையே...." என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.


லேட் ஆனாலும் சக்சஸ்

'ரஜினி முருகன்' வெளியானால் மட்டுமே, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதால் இயக்குநர் பொன்ராம் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம். ஆனாலும் கவலைப்படாதீங்க என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளனர்.


இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து நீண்ட நாட்களுக்கு முன்பே சென்சார் முடிந்து தயாராக உள்ள இடம் பொருள் ஏவல். இந்தப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் ரிலீஸ் செய்யப் படமுடியாமல் உள்ளது. இப்போது ரஜினி முருகன் படமும் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


English summary
Ponram tweets about Rajinimurugan release. Rajinimurugan starring Sivakarthikeyan and Keerthi Suresh in the lead roles is directed by Ponram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil