twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்தது... பொன்வண்ணன் விளக்கம்!

    நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்ததாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

    By Gajalakshmi
    |

    Recommended Video

    விஷால் அரசியலுக்கு வரும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது - பொன்வண்ணன்- வீடியோ

    சென்னை : நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது அதிர்ச்சியளித்ததாக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முன்னர் அரசியலுக்கு வரமாட்டோம் என்று அனைவருமே உறுதியேற்றுக் கொண்டதாகவும் பொன்வண்ணன் கூறியுள்ளார்.

    நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து பொன்வண்ணன் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : 2014ல் நடிகர் சங்கத் தேர்தலுக்கான பணிகளை தொடக்கினோம். அப்போது முதல் 2015ல் தேர்தல் நடைபெறும் வரை எங்களின் முக்கிய ஆலோசனையாக இருந்தது. நடிகர் சங்க பொறுப்பு என்பது அதன் வளர்ச்சிக்காக மட்டுமே இருக்க வேண்டும், இதை பயன்படுத்தி தனி நபர் லாபம் தேடக் கூடாது என்பதே.

    Ponvannan explains the reason for his resignation to media

    நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு, உறுப்பினர்களை சந்தித்து வாக்கு கேட்ட போதும் கூட அரசியல் சார்பு இல்லாமல் நாங்கள் செயல்படுவோம் என்று தான் உறுதியளித்திருந்தோம். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் நான், பொருளாளர் கார்த்தி என நாங்கள் 4 பேரும் சங்க பொறுப்பை ஏற்கும் போது அரசியலற்ற முறையிலேயே செயல்பட வேண்டும் என்று உறுதியேற்றோம்.

    ஆனால் திடீரென கடந்த 3ம் தேதி விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதை நான் நம்பாத நிலையில் அடுத்தடுத்து மீடியாக்களில் விஷால் வேட்புமனு தாக்கல் தொடர்பான செய்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக இது குறித்து நாசர், கார்த்தியிடம் கேட்ட போது அவர்களும் தெரிவித்து விட்டனர்.

    எங்களை கலந்து ஆலோசிக்காமல் விஷால் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டாரே என்பது அதிர்ச்சியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பலரும் என்னை தொடர்பு கொண்டு கேலி செய்தனர், எனக்கு இது மிகவும் மனஉளைச்சலாக இருந்தது. இதனால் தான் டிசம்பர் 4ம் தேதி என்னுடைய ராஜினாமா கடிதத்தை தலைவர் நாசரிடம் அளித்தேன்.

    விஷால் தேர்தலில் நிற்கக் கூடாது என்று சொல்ல எனக்கு அதிகாரமும் கிடையாது. ஆனால் தார்மீக அடிப்படையில் எதனை முன்வைத்து நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரம் செய்தோமோ அதையே தவறிவிட்டோம். தனி நபர் லாபத்துக்காக சங்கத்தை பயன்படுத்தக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor association vice president Ponvannan explains that Vishal's sudden decision to contest in by elections is the reason for his resignation
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X