»   »  நடிகர் சங்க அறக்கட்டளைப் பணம் ரூ 1.65 கோடி கையாடல்!- சரத்குமார் மீது பூச்சி குற்றச்சாட்டு

நடிகர் சங்க அறக்கட்டளைப் பணம் ரூ 1.65 கோடி கையாடல்!- சரத்குமார் மீது பூச்சி குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்த்தின் அறக்கட்டளையிலிருந்து ரூ 1.65 கோடியை முன்னாள் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கையாடல் செய்ததாக பூச்சி முருகன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறிக்கு பூச்சி முருகன் கூறுகையில், "நடிகர் சங்கம் தேர்தல் முடிந்து ஐந்து மாதமாகிவிட்டது. சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்லி முன்னாள் தலைவர் சரத்குமாருக்கு நான்கு முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒப்படைக்கவில்லை.

Poochi Murugan's Rs 1.65 cr allegation on Sarathkumar

பலரிடமும் கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டேன் என பொய்யான தகவலை கூறி வருகிறார் சரத்குமார்.

சங்கத்தில் இரண்டு விதமான கணக்குகள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று அறக்கட்டளை கணக்கு, மற்றொன்று சங்க கணக்கு.

தற்போது, அறக்கட்டளையில் உள்ள முறைகேடுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 252 பக்க அளவிற்கு கணக்கு வழக்கு பைல் பண்ணி ஆடிட்டர் கொடுத்துள்ளார். அதில் பல பொய்யான தகவல்கள், மொத்தமாக பணம் கையாடல், போலியான ரசீதுகள் என பல முறைகேடுகள் நடந்துள்ளது. சுமார் ரூ.1.65 கோடிக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை எங்கள் குழுவினரோடு புகாராக கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். விஷால் பொதுச்செயலாளர் என்பதால் அவரிடம் கையெழுத்து வாங்கி, அறக்கட்டளையின் உறுப்பினர் நான் என்பதால் கமிஷனரிடம் சென்று சரத்குமார் மீது புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம்.

இது ஏழைகளின் பணம், நடிகர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம், எனவே உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை," என்றார்.

English summary
Nadigar Sangam Trust member Poochi Murugan alleged that Sarathkumar and his team misappropriated Rs 1.65 cr from the trust.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil