இந்தாண்டின் டிசாஸ்டர் ஹீரோயின்.. பூஜா ஹெக்டேவின் புது படமும் ஃபிளாப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை: பூஜா ஹெக்டேவுக்கு இந்த ஆண்டு மற்ற எந்த முன்னணி நடிகைகளுக்கும் கிடைக்காத அளவுக்கு பல பெரிய படங்கள் கிடைத்தன.

ஆனால், அதில், ஒன்று கூட உருப்படியில்லை என இன்று வெளியான சர்க்கஸ் படத்தின் விமர்சனத்தை போட்டு நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அதிக டிசாஸ்டர் படங்கள் கொடுத்த ஹீரோயின் பூஜா ஹெக்டே தான் என கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.

டிசாஸ்டர் ஹீரோயின்

டிசாஸ்டர் ஹீரோயின்

கால் அழகி பூஜா ஹெக்டே கால் வைக்கும் இடங்களில் எல்லாம் படம் டிசாஸ்டர் ஆகி வருவதாக இன்று வெளியான சர்க்கஸ் படம் ஃபிளாப் ஆன நிலையில் பாலிவுட் ரசிகர்கள் #PoojaHegde ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஏகப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் கிடைத்த நிலையிலும் பூஜா ஹெக்டேவுக்கு ஒரு ஹிட் கூட கிடைக்கவில்லை என அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவின் டைட்டானிக்

இந்தியாவின் டைட்டானிக்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட காதல் காவியம் என்றும் இந்தியாவின் டைட்டானிக் என்றும் பில்டப் செய்யப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது. நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் பிரபாஸுக்கும் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி எந்த இடத்திலும் வொர்க்கவுட் ஆகவில்லை என கடும் விமர்சனங்கள் கிளம்பின.

கோலிவுட்டில் செகண்ட் டைம்

கோலிவுட்டில் செகண்ட் டைம்

கோலிவுட்டில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அந்த படம் தோல்வியான பிறகு கோடம்பாக்கம் பக்கமே பல காலம் தலை வைத்து படுக்காமல் இருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த நிலையில், பீஸ்ட் படமும் பூஜா ஹெக்டேவுக்கு பெரிய ஹிட்டை கொடுக்கவில்லை.

ராம்சரண் படமும் காலி

ராம்சரண் படமும் காலி

ஆர்ஆர்ஆர் படம் மூலம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ராம்சரண் படமாவது எப்படியாவது ஹிட் அடித்து விடும் என செம ஹாப்பியாக இருந்த புட்டம்மாவை அந்த படமும் புட்டுக் கொண்ட நிலையில், ரொம்பவே புலம்ப வைத்து விட்டது என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

சறுக்கிய சர்க்கஸ்

சறுக்கிய சர்க்கஸ்

இந்நிலையில், இந்த ஆண்டு கடைசி படமாக இன்று வெளியான ரன்வீர் சிங்கின் சர்க்கஸ் படமும் ரசிகர்களை கவரவில்லை என நெகட்டிவ் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. இதுக்கு காரணமும் பூஜா ஹெக்டே தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் பாவம் பூஜா ஹெக்டேவுக்கு இந்த 2022 ஆண்டு இப்படி ஆகிடுச்சே என அவரது ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஹிட் கொடுக்கும் என ஆறுதல் அளித்து வருகின்றனர்.

எம்டி தியேட்டர்

எம்டி தியேட்டர்

ரன்வீர் சிங் இந்த ஆண்டு நிர்வாண போட்டோஷூட் நடத்தியது. சமீபத்தில் நடிகை தீபிகா படுகோன் காவி பிகினி சர்ச்சை உள்ளிட்ட காரணங்களால் முதல் நாளில் கூட சர்க்கஸ் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என எம்டி தியேட்டர் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X