»   »  கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரத்குமாரின் இளைய மகள் பூஜா சக்தி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

தந்தை சரத்குமார் வழியில் வரலட்சுமி நடிக்க வந்துவிட்டார். அவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினியின் இயக்கத்தில் சக்தி என்ற படத்தில் நடிக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம்.

சரத்குமார்

சரத்குமார்

சக்தி படத்தின் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டார். போஸ்டர் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக சரத்குமார் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி இயக்கும் முதல் படம் சக்தி.

இளைய மகள்

இளைய மகள்

சரத்குமாரின் இளைய மகள் பூஜா சக்தி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். அவர் அக்கா வரலட்சுமி மாதிரி நடிகையாக அறிமுகமாகவில்லை.

காய்ட்யூம் டிசைனர்

காய்ட்யூம் டிசைனர்

சக்தி படத்தில் அக்கா வரலட்சுமியின் உடை அலங்காரத்தை பார்த்துக் கொள்கிறார் பூஜா. நான் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பூஜா தான் என் உடையை தேர்வு செய்வார். அவர் அதை தொழிலாகவே செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இந்த படம் அவருக்கு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது என்கிறார் வரலட்சுமி.

கோலிவுட்டில் அறிமுகம்

கோலிவுட்டில் அறிமுகம்

வரலட்சுமியின் லுக் பற்றி இயக்குனர் என்னிடம் விளக்கியுள்ளார். அவருக்கு படத்தில் கார்பரேட் லுக் இருக்க வேண்டுமாம். அதன்படி உடைகள் வடிவமைப்பேன் என்று பூஜா தெரிவித்துள்ளார்.

English summary
Sarath Kumar's younger daughter Pooja is making her debut in Kollywood as costume designer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil