For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'நீ இறந்தால் ஒருநாள் நியூஸ்தான்..' பிரபல நடிகையிடம் சொன்ன இயக்குனர்.. கடுமையாக விளாசிய ஹீரோயின்!

  By
  |

  சென்னை: பிரபல இயக்குனர் ஒருவரை ஹீரோயின் ஒருவர் விளாசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் கவுர்.

  பிறகு கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன், ராதாமோகனின் பயணம், விஷாலின் வெடி, ஆர்.கே.நடித்த என் வழி தனி வழி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

  எல்லா பெயரையும் அவரே வாங்கிட்டு போய்டுவாரு.. கமல் படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அமிதாப்!எல்லா பெயரையும் அவரே வாங்கிட்டு போய்டுவாரு.. கமல் படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அமிதாப்!

  ஶ்ரீனிவாச கல்யாணம்

  ஶ்ரீனிவாச கல்யாணம்

  ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை பூனம் கவுர், கிருஷ்ணா ரெட்டி இயக்கிய மாயஜாலம் என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர். தொடர்ந்து தெலுங்கில் ஆதியுடன் ஒக்க 'வி' சித்திரம், கோபிசந்துடன் சவுரியம் நிதினுடன் ஶ்ரீனிவாச கல்யாணம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

  புகார் அளிக்கலாம்

  புகார் அளிக்கலாம்

  சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயக்கும் நடிகை பூனம் கவுர், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை மீரா சோப்ரா விவகாரத்தில் அவர் பெயரை குறிப்பிடாமல் கருத்துத் தெரிவித்திருந்தார். எந்த நடிகரும் தனது ரசிகர்களை தூண்டிவிட்டு நடிகர், நடிகைகளை கிண்டல் செய்ய சொல்வதில்லை. கிண்டல், கேலிக்கு ஆளாவது நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி. குற்றச் செயல்களுக்கு புகார் அளிக்கலாம்' என்று கூறியிருந்தார்.

  பிரபல இயக்குனர்

  பிரபல இயக்குனர்

  இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு சினிமாவில், மனஆரோக்கியம் மன நலம் பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தானும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், பிரபல இயக்குனர் ஒருவரை பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடியுள்ளார். குருஜி என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒருவருடன் ஏற்பட்ட பிரச்னை பற்றி சொல்ல, அந்த இயக்குனரை சந்தித்துள்ளார்.

  தற்கொலை எண்ணம்

  தற்கொலை எண்ணம்

  அவரோ, யாரைப் பற்றி புகார் சொல்ல இருந்தாரோ, அவருடன் நெருக்கமாக இருந்துகொண்டு இவரை உதாசீனப்படுத்தினாராம். இதுபற்றி அவர் சில ட்வீட்களில் கூறியிருப்பதாவது: இந்தப் பிரச்னையை சரி செய்வது பற்றி அந்த இயக்குனரிடம் மீண்டும் கேட்டேன். எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என்றும் சொன்னேன். அவர், நீ இறந்தால் அது ஒரு நாள் செய்திதான் என்றார். அவர் இப்படி சொன்னதை கேட்டு என் மீதே கூச்சமாக உணர்ந்தேன்.

  மன அழுத்தம்

  மன அழுத்தம்

  மீடியாவும் சினிமா மாபியாவும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறேன். ஒரு பிரச்னையை தீர்த்து வைக்க கேட்டதை தவிர வேறு எதற்காகவும் அவரை அணுகியதில்லை. உங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் நடிக்க வைத்து, எனக்கு தடைவிதிக்க பார்க்கிறீர்கள். அது சரி, ஆனால் நீங்கள் குருஜி இல்லை. உங்கள் நன்மைக்காக நண்பரை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

  கடும் கஷ்டத்தில்

  கடும் கஷ்டத்தில்

  உங்கள் நண்பர், தன் மனைவியுடன் மீண்டும் சேர முடியாமல் தடுத்தீர்கள். அதனால் அவர் குடும்பம், குழந்தைகள் கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். ஏன் இப்படி செய்தீர்கள்? ஸ்லோ பாய்சன் போன்று அவரை மெதுமெதுவாக கொல்லப் பார்க்கிறீர்களா? எனக்கு கிடைத்த அதிர்ச்சிகளில் இருந்து நான் மீளவில்லை. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்று தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை. இன்னும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  English summary
  Poonam Kaur blamed a Tollywood's top director for her condition, she didn't directly disclose the name of the director. But she hinted about his name.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X