»   »  துணி மேட்டரால் நைசாக ஹைதராபாத்திற்கு எஸ்கேப் ஆன நடிகை: புலம்பும் இயக்குனர்

துணி மேட்டரால் நைசாக ஹைதராபாத்திற்கு எஸ்கேப் ஆன நடிகை: புலம்பும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜித்தன் ரமேஷ் படத்தில் நடித்துக் கொண்டிருந்த பூனம் கவுர் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றுவிட்டாராம்.

நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பூனம் கவுர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ்

நண்டு என் நண்பன் படத்திலும், ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்து வரும் படத்திலும் பூனம் கவுர் நடித்து வருகிறார். ஜித்தன் ரமேஷ் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவர் பூனம்.

காஸ்ட்யூம்

காஸ்ட்யூம்

ஜித்தன் ரமேஷ் படத்தில் தனது உடைகளை தானே தேர்வு செய்வதாக பூனம் தெரிவிக்க இயக்குனர் ஆண்டாள் ரமேஷும் சரி என்று கூறியுள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்துள்ளனர்.

ஆடை

ஆடை

படப்பிடிப்புக்கு வந்த பூனம் அதிக விலைக்கு உடைகள் வாங்க பணம் கேட்டுள்ளார். இது சின்ன பட்ஜெட் படம் அவ்வளவு பணம் இல்லை என்று கூற பூனம் பிரச்சனை செய்தார் என்கிறார் ஆண்டாள் ரமேஷ்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஆடை விவகாரத்தில் பிரச்சனை செய்த பூனம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு ஹைதராபாத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டார். தொடர்பு கொண்டபோது இனி இந்த படத்தில் நடிக்க முடியாது என்றார் என ரமேஷ் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Poonam Kaur has reportedly walked out of Jithan Ramesh's movie without even informing the concerned persons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X