»   »  நிர்வாணமாக ஓடுவேன் என ஏன் அறிவித்தேன் தெரியுமா?: பூனம் பாண்டே

நிர்வாணமாக ஓடுவேன் என ஏன் அறிவித்தேன் தெரியுமா?: பூனம் பாண்டே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என அறிவித்தது பப்ளிசிட்டிக்காக என நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

நானும் மாடல் அழகியாக்கும், நானும் பாலிவுட் நடிகையாக்கும் என்று பூனம் பாண்டே வாய் வலிக்க கூறியும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு அதுவும் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார்.

யாருடா இந்த பூனம் பாண்டே என்று ஆளாளுக்கு கூகுள் செய்தனர்.

நிர்வாண ஓட்டம்

நிர்வாண ஓட்டம்

2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என ஒரு எசக்குபிசக்கான அறிவிப்பை வெளியிட்டு பிரபலம் ஆனார் பூனம்.

பூனம்

பூனம்

நான் என் பத்திரிகையாளர் நண்பர்களுடன் அமர்ந்து ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந்தேன். 25 முதல் 30 காலண்டர் ஷூட்டுகள் செய்தும் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை என்கிறார் பூனம்.

கான்கள்

கான்கள்

பாலிவுட்டில் கான்கள் மற்றும் கபூர்களுடன் பணியாற்றிய பல நடிகைகள் உள்ளனர். ஆனால் மக்களோ கான்கள் மற்றும் கபூர்களை மட்டும் பார்த்துவிட்டு அந்த நடிகைகளை கண்டுகொள்ளவில்லை என்று பூனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

கான்கள், கபூர்கள் இருக்கும் இடத்தில் நமக்கு அடையாளம் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்பதை உணர்ந்தேன். அந்த அடையாளத்தை பெற மற்றும் கவனத்தை ஈர்க்க சர்ச்சையை கிளப்ப முடிவு செய்தேன். அதனால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவதாக அறிவித்தேன் என பூனம் கூறியுள்ளார்.

சேலை

சேலை

பூனம் பாண்டே அவ்வப்போது தன்னுடைய அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடலை மறைத்தபடி சேலை அணிந்து படத்தில் நடிக்கும் ஆசை வந்துள்ளது.

English summary
Actress Poonam Pandey said that she created that nudity controversy in 2011 to get attention in Bollywood which is ruled by Khans and Kapoors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil