மம்முட்டி படத்தில் போலீஸாக நடிக்கும் பூர்ணா!
சென்னை : நடிகை பூர்ணா தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தில் நடித்து வருகிறார். சேது என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் பூர்ணா. இப்படத்தில் வலைதள எழுத்தாளராக நடிக்கிறார் மம்முட்டி.
'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தில் ராய் லட்சுமி, மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக மம்முட்டி படத்தில் இணைந்திருக்கிறார் ராய் லட்சுமி. நடிகை அனு சித்தாராவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
நடிகை பூர்ணா, சசிகுமார் ஹீரோவாக நடித்த 'கொடிவீரன்' படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் மொட்டைத் தலையுடன் வரும் காட்சிக்காக நிஜமாகவே மொட்டையடித்துக் கொண்டார் பூர்ணா.
சமீபத்தில், மிஷ்கின், ராம் நடிப்பில் வெளியான 'சவரக்கத்தி' படத்தில் காது கேளாதவராக நடித்திருந்தார் பூர்ணா. இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவரும் பூர்ணாவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.