விரைவில் அந்த நாள்… திருமணம் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை !

சென்னை : காதலர்களான ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடி திருமணம் குறித்து மகிழ்ச்சியான தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த தகவலால் ரேஷ்மா மற்றும் மதனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்த போது காதல் வயப்பட்டனர்.

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சுவாரசியமான பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும், பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறது. புதுப்புது திரைப்படங்களை ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சி என்ற வரிசையில் போட்டி போட தயாராகி வருகிறது.

அபி டெய்லர் சீரியல்

அபி டெய்லர் சீரியல்

கலர்ஸ் தொலைக்காட்சி, இதன் முதன் முயற்சியாக பிரபலமான நடிகர்கள் நடித்த 'அபி டெய்லர்' என்ற புது சீரியலை ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

காதல் ஜோடி

காதல் ஜோடி

இதில் காதலர்களான ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். பூவே பூச்சடவா தொடரில் ஏற்கனவே இருவரும் நடித்திருந்தாலும் காதலர்களாக முதன்முறையாக இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

சுவாரசியமான கதை

சுவாரசியமான கதை

இந்த சீரியலில் வாழ்க்கையில் உயரத்துடிக்கும் இளம் பெண் கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்துள்ளார். இவர் அபி டெய்லர் என்ற கடையை நடத்தி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். பெரிய பணக்கார வீட்டு பையனாக, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் அதிபராக மதன் பாண்டியன் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடர் தற்போது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்று வருகிறது.

காதல்

காதல்

ரேஷ்மா ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும், மதனும் , ரேஷ்மாவும் இந்த சீரியலில் நடிக்கும் போதுதான் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். ரேஷ்மா மற்றும் மதன் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகவே இருந்து வருகின்றனர்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் பலரும் கேட்ட கேள்வி நீங்களும் மதனும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தான். இதற்கு மதன் மற்றும் ரேஷ்மா ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விரைவில் அந்த நாள் வர இருக்கிறது என்று கூறியுள்ளார். ரேஷ்மாவின் இந்த பதிவால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா

ரேஷ்மாவும் மதனும் நடிப்பில் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் மதன் கொழுந்தனாக நடித்து இருப்பார். மதனுக்கு மனைவியாக கிருதிகா லட்டு நடித்திருப்பார். குடும்ப உறவுகளைக் கொண்ட இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக இருந்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X