»   »  வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சைக்கோ - பிரபல நடிகருக்கு நேர்ந்த சோதனை!

வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சைக்கோ - பிரபல நடிகருக்கு நேர்ந்த சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் மேகா ஸ்ரீகாந்த். 'ஸ்வராபிஷேகம்', 'விரோதி' உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

'தாஜ்மஹால்' உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் மேகா ஶ்ரீகாந்த். டோலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றிலிருந்து வெகு தூரம் தள்ளி நிற்பவர் இவர்.

Popular Actor hit by psycho

இந்நிலையில் சைக்கோ ஒருவர் திடீரென இவரின் வீட்டுக்கு உள்ளே புகுந்து விலையுயர்ந்த சொகுசு கார் மற்றும் சில பொருட்களையும் அடித்து நொறுக்கியதோடு மேகா ஸ்ரீகாந்தையும் தாக்க முயற்சித்துள்ளார்.

உடனே போலீசாருக்கு தகவல் சொன்னதும் உடனடியாக வந்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் அந்த நடிகரின் வீட்டில் சமையல்காரராக 3 மாதங்கள் வேலை செய்தவராம். அவரின் சைக்கோ குணத்தால் ஸ்ரீகாந்த் அவரை வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். அந்த ஆத்திரத்தால் மீண்டும் வந்து அவரைத் தாக்க முயற்சித்துள்ளார்.

English summary
Popular actor Mega Srikanth is from Telugu cinema. He has acted in over 100 films including 'Swarabhishekam' and 'Virodhi'. Psycho tried to break into his house and break the goods and attack him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil