தலைவர் 169 இதுவரை வந்த தகவல் பொய்யா? இப்ப தான் இதுவே பண்றாரா நெல்சன்...பிரபல நடிகர் தந்த பகீர் அப்டேட்

சென்னை : ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்க போகும் தலைவர் 169 படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை விட, பயம் தான் பலரின் மனதில் அதிகம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர் ஒருவர் தலைவர் 169 பற்றி கூறி உள்ள லேட்டஸ்ட் அப்டேட் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்த இரண்டு வெற்றி படங்களை காமெடி, என்டர்டைன்மென்டாக கொடுத்ததால் நெல்சன் திலீப்குமார் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் படம் வேற லெவலில் இருக்கும் என செமயாக பில்டப் கொடுக்கப்பட்டது.

ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் ரிலீசான விஜய்யின் பீஸ்ட் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நெல்சன் திலீப்குமாரை பலரும் கண்டபடி திட்டி தீர்த்து விட்டனர். இரண்டு மாதங்கள் ஆகியும் சோஷியல் மீடியாவில் நெல்சன் பற்றிய ட்ரோல்கள் இதுவரை குறையவில்லை. அடுத்து ரஜினியை வைத்து இயக்க போகும் தலைவர் 169 என்ன ஆகுமோ என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் 169 வதந்தி

தலைவர் 169 வதந்தி

பீஸ்ட் படத்தின் ரிலீசிற்கு முன்பே தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விட்டார் நெல்சன். பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் தலைவர் 169 பட வாய்ப்பை நெல்சன் இழந்து விட்டதாகவும், வேறு டைரக்டரை மாற்ற ரஜினி முடிவு செய்து விட்டதாகவும் வதந்தி பரவியது. பிறகு ரஜினியே அதை முடித்தும் வைத்தார்.

தீயாய் வேலை செய்யும் நெல்சன்

தீயாய் வேலை செய்யும் நெல்சன்

பீஸ்ட் படம் போல் தலைவர் 169 படமும் ஆகி விடக்கூடாது என கே.எஸ்.ரவிக்குமாரை கூப்பிட்டு, திரைக்கதையை சரி செய்யும் பொறுப்பை ரஜினி கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. நெல்சனும் எப்படியாவது இழந்த இடத்தை பிடித்து விட வேண்டும், தலைவர் 169 படத்தை பிளாக்பஸ்டர் வெற்றி படமாக ஆக்கி விட வேண்டும் என தீயாய் வேலை செய்வதாக கூறப்பட்டது.

ஆகஸ்ட்டில் தலைவர் 169 ஷுட்டிங்

ஆகஸ்ட்டில் தலைவர் 169 ஷுட்டிங்

தலைவர் 169 ஷுட்டிங் ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் படம் அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை பூஜை கூட போடாதது ஏன் என இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. ஆகஸ்ட்டில் ஷுட்டிங் எப்படியும் துவங்கி விடும் என்பதால், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாகி விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபல நடிகரின் ஷாக் அப்டேட்

இந்த சமயத்தில், பிரபல காமெடி நடிகரான கிங்ஸ்லீயிடம் சமீபத்தில், தலைவர் 169 படத்திலும் நீங்கள் நடிக்கிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை. நெல்சன் தற்போது தான் ஃபர்ஸ்ட் ஆஃப் கதையை தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். வெறித்தனமாக வேலை செய்து கொண்டிருப்பதால் நிச்சயம் படம் வேற லெவலில் வரும் என கூறி உள்ளார்.

இப்போ தான் இதுவே பண்ணுறாரா

இப்போ தான் இதுவே பண்ணுறாரா

கிங்ஸ்லீயின் இந்த பதில் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. ஃபர்ஸ்ட் ஆஃப் கதையையே இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கிறாரா. இனி எப்போ செகண்ட் ஆஃப் கதை எழுதி முடித்து, அதை ரஜினி ஓகே பண்ணி, திருத்தங்கள் செய்து, அது ஓகே ஆகி, எப்போ ஷுட்டிங் துவங்கறது. இப்போதைக்கு தலைவர் 169 ஷுட்டிங்கை ஆரம்பிக்க மாட்டார்கள் போல என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் புலம்ப துவங்கி விட்டனர்.

அப்போ டைட்டில் தகவல் பொய்யா

அப்போ டைட்டில் தகவல் பொய்யா

ஃபர்ஸ்ட் ஆஃப் கதையையே நெல்சன் தற்போது எழுதிக் கொண்டிருப்பதாக கிங்ஸ்லே சொல்கிறார். அதே சமயம், தலைவர் 169 படம் சிறை கைதிகள், சிறைக்களம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை. அதனால் படத்திற்கு ஜெயிலர், கிரிமினல், சாம்ராட், பாஸ் போன்றவற்றில் எதை டைட்டிலாக வைக்கலாம் என படக்குழு ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் பரவியது. இதனால் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் படங்களை பார்த்து நெல்சன் காப்பி அடித்து விட்டார் என்ற ட்ரோல் தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது சோஷியல் மீடியாவில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X