Just In
Don't Miss!
- News
பாஸ்டேக் மூலம் 'ரெக்கார்டு' வசூல் - ஒரே நாளில் ரூ.102 கோடியாம்
- Automobiles
செம ஸ்பீடா எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஆகும்... சென்னையில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு...
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் திருமணம்...இணையத்தை தெறிக்க விட்ட நடிகையின் பேச்சுலர் பார்ட்டி போட்டோஸ்
சென்னை : துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி. இவர் சமீபத்தில் தனது திருமணத்தை அறிவித்தார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிரஞ்சனியை தான் தேசிங்கு பெரியசாமி திருமணம் செய்து கொள்ள போகிறார். நிரஞ்சனி வேறுயாரும் இல்லை, டைரக்டர் அகத்தியனின் மகள் தான்.

சென்னை 28 படத்தில் நடித்த விஜயலட்சுமி, குக் வித் கோமாளி பிரபலம் கனி ஆகிய இருவரும் நிரஞ்சனியின் சகோதரிகள் தான். ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி, வாயை மூடி பேசவும், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, பென்சில், கபாலி உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி உள்ளார்.

தனது திருமணத்தை முன்னிட்டு, தோழிகளை அழைத்து சமீபத்தில் பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார் நிரஞ்சனி. தனது தங்கையின் பேச்சுலர் பார்ட்டி கொண்டாட்ட போட்டோக்களை நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோக்களை தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சகோதரிகள் 2 பேரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.