»   »  ராம் சரணுடன் ஐட்டம் சாங்குக்கு ஆடும் பிரபல நடிகை!

ராம் சரணுடன் ஐட்டம் சாங்குக்கு ஆடும் பிரபல நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டுக்குச் சென்றார்.

முதல் படமே ஹிரித்திக் ரோஷன் உடன் 'மொகஞ்சதாரோ' படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் தோல்வி அடைய, தற்போது தெலுங்கில் முகாமிட்டுள்ளார்.

Popular actress item dance with ram charan

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் 'டிஜே' படத்தில் நடித்தவர், அடுத்து வேறு படங்கள் எதுவும் இல்லாததால் தற்போது ராம் சரண் நடித்து வரும் 'ரங்கஸ்தலம்' என்ற படத்தில் ஒரு ஐட்டம் சாங்கில் நடனமாடுகிறார்.

இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். ஆனால், அவர் சமீபகாலமாக கிளாமராக நடிப்பதைத் தவிர்த்து வருவதால், இளம் ரசிகர்களைக் கருத்தில் கொண்டு ராம் சரணுடன் ஒரு பாடலில் பூஜா ஹெக்டேவை கவர்ச்சி நடனம் ஆட வைக்கிறார்களாம்.

1985-ல் நடக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம் ஆந்திராவின் கடலோர கிராமத்தில் பணக்காரப் பெண்ணுக்கும், ஏழை இளைஞனுக்குமிடையே நடக்கும் காதல் கதையை வைத்து உருவாகிறது.

English summary
Pooja Hegde is the heroine in the movie 'Mugamoodi' lead by Jeeva. The film 'Mohenjodaro' starring with Hrithik Roshan was failed. Currently, She dance in an item song in 'Rangasthalam' lead by Ram Charan and samantha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X