»   »  கணவரை விவாரத்து செய்யும் பிரபல கன்னட நடிகை!

கணவரை விவாரத்து செய்யும் பிரபல கன்னட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரபல கன்னட நடிகை பிரேமா, தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா. கர்நாடக அரசு, பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

Popular actress Prema files for divorce

தமிழில் தாயே புவனேஸ்வரி, அழகேசன் படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலுடன் இவர் நடித்த ப்ரின்ஸ் மலையாளப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கன்னடம், தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார். விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Prema who is known for her role in the movie The Prince opposite Mohanlal, has filed for divorce from her husband Jeevan Appachu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil