Don't Miss!
- News
அடிதூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. களமிறங்கிய சர்வதேச "டீம்".. சென்னைக்கு குட்நியூஸ்
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
'அர்ஜுன் ரெட்டி' ஹீரோ இல்லையாம்... ஜெயலலிதாவின் 'தலைவி'யில் சோபன்பாபுவாக நடிப்பது இவராமே!
சென்னை: ஜெயலலிதாவின் பயோபிக்கான, 'தலைவி' படத்தில் சோபன்பாபுவாக நடிப்பது பெங்காலி நடிகர் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
கங்கனா ரனவத், ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார்.

பிருந்தா பிரசாத்
நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இவரது எம்.ஜி.ஆர் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. நடிகர் பிரகாஷ்ராஜ், கருணாநிதியாக நடிக்கிறார் என்றும் பிரியாமணி, சசிகலாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் சமுத்திரகனி ஆர்.எம்.வீரப்பனாக நடிக்கிறார்.

திருப்புமுனை
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்களின் ஒருவரான பிருந்தா பிரசாத் அறிவித்திருந்தார். அதன்படி ஜூன் மாதம் 26 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதோடு, கங்கனா நடனம் ஆடுவது போன்ற ஸ்டில் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் அந்த ஸ்டில் வைரலானது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த சம்பவத்தை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.

எம்.ஜி.ஆரின் உடல்
எம்.ஜி.ஆர் மறைந்த போது அவரது உடல், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் விட்டு கதறினர். அப்போது எம்.ஜி.ஆரின் உடல் டிரெக்கில் மெரினா பீச்சுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அருகில் இருந்த ஜெயலலிதாவை, சிலர் அங்கிருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
Recommended Video

ஜிஸூ சென்குப்தா
இப்போது அந்தக் காட்சியை, தலைவி படத்துக்காக சென்னையில் படமாக்கினர். இந்நிலையில் இந்தப் படத்தில் சோபன்பாபுவாக, தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்பட்டது. அவரிடம் பேச்சுவார்த்தையும் நடந்தி வந்தனர். இந்நிலையில், பிரபல பெங்காலி நடிகர் ஜிஸூ சென்குப்தா அந்த கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர், தெலுங்கில் வெளியான என்.டி.ஆர் வாழ்க்கை கதையில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்.வி.பிரசாத் கேரக்டரில் நடித்திருந்தார்.