Don't Miss!
- Finance
Microsoft: 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு 10 பில்லியன் முதலீடு..!
- News
"சர்ப்ரைஸ்" தந்த கதிரவன்.. பார்வர்டு பிளாக் அதிரடி அறிவிப்பு.. திக்குமுக்காடிப்போன தமிழக காங்கிரஸ்
- Technology
இந்தியாவில் விமானத்தை இறக்கிய Amazon: ஜெயிச்சுட்டோம் மாறா! இவ்ளோ நன்மைகள் இருக்கா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Lifestyle
உடலுறவுக்கு அடிமையாக இருந்த அரசர்கள் யார் தெரியுமா? இவர் 18,000 பெண்களுடன் உடலுறவு வைச்சவராம்...!
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Automobiles
இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
மகேஷ் பாபுவின் பாலிவுட் பஞ்சாயத்து.. இத்தனை பிரபலங்கள் என்ன சொல்லி விளாசியிருக்காங்கன்னு பாருங்க!
ஹைதராபாத்: இந்தி திரைப்படங்களில் தனக்கு நடிக்க ஆர்வமில்லை என்றும் பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தை தர முடியாது என்றும் மகேஷ் பாபு பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சமீபத்தில் நடந்த மேஜர் எனும் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இந்தி படங்களில் எப்போது உங்களை பார்க்கலாம் என்கிற கேள்விக்கு மகேஷ் பாபு இப்படி பட்டென்று பதில் அளித்து விட்டார்.
இந்நிலையி,ல் பாலிவுட்டின் தயாரிப்பாளரான முகேஷ் பாட், இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட சிலர் அவரது கருத்துக்கு பதில் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்தி திரையுலகம் எனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்ன மகேஷ் பாபு.. இத்தனை கோடி சம்பளமா?

பாலிவுட் பஞ்சாயத்து
அஜய் தேவ்கன் சமீபத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு பாலிவுட் படங்களால் தனக்கான சம்பளத்தை தர முடியாது என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும், தெலுங்கு சினிமாவில் நடிப்பதே தனக்கு சந்தோஷம் என்றும் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

முகேஷ் பாட் கருத்து
பாலிவுட் திரையுலகத்தால் உங்களுக்கான சம்பளத்தை கொடுக்க முடியவில்லை என்பது சந்தோஷமான விஷயம் தான். டோலிவுட்டில் உங்கள் வளர்ச்சி அந்த அளவில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மகேஷ் பாபு மீது எனக்கு நிறையவே மரியாதை உள்ளது. ஆனால், சமீப காலமாக நடிகர்களை விலைப்பட்டியல் வைத்து மதிப்பிடுவது ஏன் தான் என்று தெரியவில்லை என விளாசி உள்ளார். மேலும், சில பெரிய நடிகர்கள் நல்ல கதைகளை கேட்டு பாதி சம்பளத்துக்கு எல்லாம் பணியாற்றி வருகின்றனர் என்றும் மகேஷ் பாபுவுக்கு உணர்த்தும் வகையில் பேசி உள்ளார்.

எனக்கு புரியல
தெலுங்கு படங்கள் இந்தியில் டப் ஆகித் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை சமீப காலமாக பெற்றுள்ளன. இதில், மகேஷ் பாபுவுக்கான சம்பளத்தை தர பாலிவுட் சினிமாவால் முடியாது என அவர் எப்படி சொன்னார் என்றே எனக்கு புரியவில்லை என இயக்குநர் ராம் கோபால் வர்மா விளாசி உள்ளார்.

சோஷியல் மீடியா சதி
தென்னிந்திய படங்களுக்கும் இந்தி படங்களுக்கும் இடையே இப்படி சண்டையை கொளுத்திப் போடுவது சோஷியல் மீடியா சதி என பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளார். எந்த படத்தை பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், சமீப காலமாக பாலிவுட் இயக்குநர்கள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் எடுக்காதது தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.