»   »  கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்டு ஓட்டலில் சர்வராக நிற்கும் நடிகர்!

கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்டு ஓட்டலில் சர்வராக நிற்கும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீப்பெட்டி கணேசனைத் தெரியுமா... ரேணிகுண்டா படத்தில் இயக்குநர் பன்னீர் செல்வத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக முக்கியமான வேடம் கொடுத்து அந்த குள்ள மனிதனை உயரமாக்கிக் காட்டினார் பன்னீர்.

அதைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை, ராஜபாட்டை என்று பெரிய படங்களில் வலம் வந்தவர், திடீரென காணாமல் போனார்.

இப்போது கடந்த ஒரு வாரமாக அவரைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வலம் வருகின்றன.

Popular comedian turns waiter a small hotel

என்ன மேட்டர்?

கேகே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக மாறி, பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கிறார் தீப்பெட்டி கணேசன்.

அவரை ஹோட்டலில் பார்ப்பவர்கள், என்னய்யா இப்படி ஆகிட்டியே என்று கேட்டால், பழியைத் தூக்கி மேனேஜர் மீது போடுகிறாராம்.

ஆனால் உண்மையில் இந்த காமெடி நடிகருக்கு ஏன் இந்த நிலை?

குடிப் பழக்கம்தான். சினிமாவில் பிஸியாக இருந்த காலத்தில் சதா சர்வகாலமும் குடி, நேரத்துக்கு ஷூட்டிங் போகாதது என ஏகத்துக்கும் அலப்பறை செய்திருக்கிறார். விளைவு, வந்து கொண்டிருந்த நல்ல வாய்ப்புகள் நழுவிப் போய்விட்டன.

இப்போது வாய்ப்புகளே சுத்தமாக இல்லாத நிலையில் ஓட்டலில் சர்வராக மாறியிருக்கிறார் என்கிறார்கள் அவரை உடனிருந்து கவனிப்பவர்கள்.

English summary
Popular comedian Theeppetti Ganesan is now working as a wauter at a small restaurant in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil