சூசகமாக தளபதி 67 அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை : விஜய்நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தளபதி 67' படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய், சமந்தா, த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரித்விராஜ் உள்பட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் 6 வில்லன்கள் இருப்பதாகவும், அவர்களில் கெளதம் மேனனும் ஒருவில்லனாக நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டது.

மன்சூர் அலி கானுக்கு பெரிய கேரக்டர்
இதற்கிடையில் சமீபத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலி காவை பார்த்து ஆச்சரியப்படுவதாகவும், இது போல் கோடியில் ஒருவர் தான் இருக்க முடியும் என கூறிய அவர், அவருக்கு தன்னுடைய அடுத்த படத்தில் மிகப் பெரிய கேரக்டர் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தளபதி 67 அறிவிப்பு எப்போ வரும்
படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருந்தாலும், படம் பற்றி இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவே இல்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அக்டோபர் மாதம் தளபதி 67 அறிவிப்பு வெளியிடப்படும் அல்லது ஷுட்டிங் துவங்கப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது.

சூசகமாக கன்ஃபார்ம் செய்த பிரபலம்
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 1 முதல் 10 வரையிலான எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6,7 என்ற எண்களுக்கு பதிலாக பட்டாசு வெடிக்கும் எமோஜி பதிவு செய்யப்பட்டுள்ளது.

செம அப்டேட்டா இருக்கே
எனவே ‘தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முதல் தொடங்கும் அல்லது 'தளபதி 67' படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு தீபாவளி என்பதை மறைமுகமாக ரத்னகுமார் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.What's cooking director lokesh என்று வேறு கேட்டுள்ளார். அந்த 6,7 பட்டாசு வெடிப்பது code word ஆ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Recommended Video

இவரை யாருன்னு தெரியுதா?
மேயாத மான், ஆடை, குலுகுலு படங்களை இயக்கியவர் தான் இந்த ரத்னகுமார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 படத்தில் இணைவதால் எந்த மாதிரியாக படம் இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்க துவங்கி உள்ளனர். ஆனால் தளபதி 67 படம் கேங்ஸ்டர் கதை, இதில் 50 வயது மும்பை தாதாவாக விஜய் நடிப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











