»   »  "தனிச்சல்ல ஞான்".. உண்மைதான் கல்பனா.. எங்களது நினைவுகளில் எப்போதும் இருப்பீர்கள்!

"தனிச்சல்ல ஞான்".. உண்மைதான் கல்பனா.. எங்களது நினைவுகளில் எப்போதும் இருப்பீர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகையாக திகழ்ந்த கல்பனா இன்று காலமானார். மாரடைப்பினால் அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 வயதான கல்பனா 300 படங்களுக்கு மேல் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற போது அவருடைய மரணம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனியின் சகோதரியான கல்பனா திரைப்பட உலகில் செல்லமாக "குண்டு கல்பனா" என்று அழைக்கப்பட்டவர். "ஜீரோ சைஸ்" அழகு என்ற நிலையில் கமல் முதல் பாக்யராஜ் வரை இவரை கதாநாயகியாக நடிக்க வைத்து அழகு பார்த்தனர்.

சின்னவீடு கல்பனா:

சின்னவீடு கல்பனா:

1983 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான "மஞ்சு" திரைப்படத்தில் அறிமுகமானவர் கல்பனா. ஏற்கனவே இவரது சகோதரியான ஊர்வசியை அறிமுகப்படுத்திய இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் "சின்னவீடு" திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகப்படுத்தினார்.

அன்பு மாமோய்:

அன்பு மாமோய்:

"மாமா மாமா" என்று கொழுக், மொழுக் உடலுடன் வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த பாக்யராஜின் மனைவி வேடம் கல்பனாவிற்கு. அமைதியான பேச்சிலேயே வில்லியை விரட்டுவதாகட்டும், ஆங்கிலத்தில் பேசி பாக்யராஜை விழி பிதுங்க வைப்பதாகட்டும் அசத்தியிருப்பார் கல்பனா.

சதிலீலாவதி ஹீரோயின்:

சதிலீலாவதி ஹீரோயின்:

அதற்கடுத்ததாக கமலின் சதிலீலாவதி... 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் அரவிந்த் மனைவியாக, இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருந்தார். வேறொரு பெண்ணை நாடிச் சென்ற கணவனுக்கு தன்னிலை புரிய வைக்கும் கேரக்டரில் இந்த படத்திலும் கமலுக்கு இணையாக அடிதூள் செய்திருப்பார் கல்பனா.

கொஞ்சும் மலையாளம்:

கொஞ்சும் மலையாளம்:

தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்திருந்தாலும் மலையாளம் கலந்த கொஞ்சும் தமிழாலேயே சிரிப்பினை வரவழைக்கும் திறமை கொண்டிருந்தார். பெரிய இடைவெளிக்குப் பின் 2001 ஆம் ஆண்டில் மாதவன் - ஜோதிகா நடித்த "டும் டும் டும்" படத்தில் திருமணமாகாத முதிர்கன்னி வேடத்தில் நடித்திருந்தார். பாதி படத்தில் எண்ட்ரி ஆனாலும் "அத்தான் வருவாக" பாட்டினால் அவர் அப்படத்தில் தனித்து தெரிந்தார்.

பூவான் மதி பூவான்:

2002 ஆம் ஆண்டில் மீண்டும் கமலின் "பம்மல் கே சம்பந்தம்" படத்தில் மலையாள செவிலி "மரியம் குட்டி". அந்த குட்டி கட் தலை முடியும், மூக்கின் நுனியில் கண்ணாடியுமாக சிம்ரனுடன் அவர் அடிக்கும் காமெடி லூட்டி செம. அதுவும், எப்போ பார்த்தாலும் "பூவான் பூவான்" என்று மலையாளத்தில் பேசி கமலிடம் மாட்டிக் கொள்வதே அவர் வேலை இந்தப் படத்தில். தன்னுடைய காமெடி கதாப்பாத்திரத்தினை சிறப்பாக செய்திருப்பார் இந்த "ஏசியா நெட்".

அற்புதமான நடிப்பு:

அற்புதமான நடிப்பு:

கடைசியாக அற்புதத் தீவு, இதயத் திருடன் திரைப்படங்களில் நடித்திருந்தார் கல்பனா. "தனிச்சல்ல ஞான்" என்னும் திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கிய சிறந்த குணச்சித்திர காமெடி நடிகையான கல்பனாவின் திடீர் மரணம் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்புதான்.

உண்மைதான் கல்பனா.. நீங்கள் தனித்து இல்லை.. எங்களது நினைவுகளில் எப்போதும் இருப்பீர்கள்!

English summary
Popular Malayalam film actress Kalpana passed away on Monday, film director Sibi Malayil said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil