»   »  தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரின் மனைவி மரணம்

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரின் மனைவி மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: பிரபல மலையாள இசையமைப்பாளர் பிஜிபல் மணியில்லின் மனைவி சாந்தி மோகன்தாஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

மலையாள திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் பிஜிபல் மணியில்(44). அவர் அரபிகதா படம் மூலம் கடந்த 2007ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

2013ம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.

மனைவி

மனைவி

பிஜிபலுக்கும், டான்ஸரான சாந்தி மோகன்தாஸுக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தேவதத், தயா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மரணம்

மரணம்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாந்திக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தி சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை 4 மணிக்கு உயிர் இழந்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

புகழ் பெற்ற நடன கலைஞரான சாந்தி மோகன்தாஸ் 36 வயதில் உயிர் இழந்துள்ளது மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் பிஜிபலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டான்ஸ்

பிஜிபல் இசையமைத்த பாடலுக்கு சாந்தி டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி அண்மையில் வைரலானது. சாந்தியின் மரணம் அவருக்கு பழக்கமானவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

English summary
Popular Mollywood music director Bijibal Maniyil's wife Santhi Mohandas passed away. She was admitted in a private hospital for brain hemorrhage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X