Don't Miss!
- News
74வது குடியரசுத் தினம்.. அக்னி வீரர்கள் முதல் பெண் BSF வீராங்கனைகள் வரை! விழாவில் ஏகப்பட்ட புதுமைகள்
- Finance
சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?
- Automobiles
ஓர் இன்ஸ்டாகிராம் பிரபலம் இப்படியா நடந்து கொள்வது? ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு ரூ.17,000 அபராதம் - போலீஸார் அதிரடி
- Sports
சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு சரவெடி விருந்து.. நியூசி,உடனான 3வது ODI.. பிட்ச்-ல் உள்ள சர்ஃபரைஸ்!
- Lifestyle
40 வயசு ஆயிடுச்சா? மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
அப்படி என்ன சோகம்... மர்ம தேசம் சீரியல் புகழ், சின்ன திரை நடிகர் லோகேஷ் திடீரென தற்கொலை...!
சென்னை: 1990ல் தொலைக்காட்சியில் மர்ம தேசம், ஜீ பூம்பா போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமாக இருந்தது.
இந்தத் தொடரில் ராசு என்ற சிறுவனாக நடித்து பிரபலமானவர் நடிகர் லோகேஷ் ராஜேந்திரன்.
மர்ம தேசம், ஜீ பூம்பா உட்பட ஏராளமான நாடகங்களில் நடித்து லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு அமைதி தேவை..ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை !

தொடரும் சோகம்
கடந்த சில மாதங்களாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் துணை நடிகை, சீரியல் நடிகை ஆகியோர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. 90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத மர்ம தேசம். ஜு பூம்பா சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகர் லோகேஷ். இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்ன திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறக்க முடியாத மர்ம தேசம்
மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியல்களில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மேலும் பல நாடகங்களிலும், ஆனந்தபுரத்து வீடு, அம்புலி உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் லோகேஷ். அதேபோல், இயக்குநராக வேண்டும் எனவும் முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில், கேரியரில் முன்னேறி வந்த லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மர்மதேசம் தொடர் சமீபத்தில் தான் 25 ஆண்டுகளை கொண்டாடியது, இப்போது மறு ஒளிப்பரப்பும் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல்களில் மர்ம தேசமும் மிக முக்கியமானது.

மருத்துவமனையில் உயிரிழந்தார்
லோகேஷ் கடந்த அக்டோபர் 2ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் லோகேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷை பரிசோதித்ததில் அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், லோகேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப விவகாரமா?
முதற்கட்ட விசாரணையின்படி லோகேஷ் திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு குடும்ப பிரச்சனைகள் இருந்ததால், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக லோகேஷின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், லோகேஷின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை தான் காரணமா? என்பது குறித்து கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்துகொண்ட லோகேஷுக்கு சின்ன திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தான் மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிகிழ்ச்சியை அந்த தொடர் இயக்குனர், தயாரிப்பாளர், லோகேஷ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் சென்னையில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இந்தநிலையில், லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியான பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தில் ராஜேந்திரனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்றும் அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் உள்ளது. சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் இந்த் தொடர்கள் ஒளிபரப்பாகி உள்ளன. சமீபத்தில் மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன. அந்த புகைப்படத்தில் பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டி ராசுவாக நடித்த லோகேஷை பார்த்து. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன லோகேஷ் ராஜேந்திரன் இளைஞனாக வளர்ந்து இருந்தார். மர்ம தேசம் தொடரை விடவும் 'ஜீ பூம்பா' சீரியல் லோகேஷூக்கு மிகப் பெரிய புகழை கொடுத்தது. நடிப்பை விட்டுட்டு இயக்கம், சினிமா சார்ந்த தொழில் நுட்ப வேலைகளில் லோகேஷ் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை இவர் இயக்கிய சில குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. கூடிய விரைவில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கவும் லோகேஷ் முயற்சி செய்து வந்து இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.